Kitchen Tips and Tricks
ஒருவரின் வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிய அவர்களின் கிட்சன் மற்றும் டாய்லட் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். கிட்சனையும், டாய்லட்டையும் சுத்தம் செய்வது ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் பழையது போலவே இருக்கும். இதனை சுத்தப்படுத்துவதற்காக கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
Kitchen Tips:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
கேஸ்:
கேஸ் எப்பொழுது பார்த்தாலும் அழுக்காக தான் இருக்கும். மேலும், அதில் விடாப்பிடியான கறைகள் இருக்கும். இதனை சுத்தப்படுத்துவதற்கு முதலில் ஒரு துணியால் துடைத்து கொள்ளவும்.
பிறகு அதன் மேலே கல் உப்பு சிறிதளவு போட்டு ஸ்கிரப்பரை பயன்படுத்தி தேய்க்கவும். கம்பி நாரை கொண்டு தேய்க்காதீர்கள். ஏனென்றால் கீறல் விழுந்து விடும்.
அதன் பிறகு விபூதியை கேஸ் முழுவதும் போட்டு கொள்ளவும். பிறகு ஸ்கிரப்பரை பயன்படுத்தி தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!
Toilet Cleaning Tips:
ஒரு பாத்திரத்தில் 2 எலும்பிச்சை சாறு, 4 தேக்கரண்டி துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், நாப்தலின் உருண்டை, 300 ml தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். அப்போது தான் இந்த கலவை 3 மாதம் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
இந்த கலவையை டாய்லெட்டில் ஊற்றி பிரஷை பயன்படுத்தி தேய்த்தால் புதியது போல ஜொலிக்கும். மேலும், இந்த கலவையை பயன்படுத்துவதால் பூச்சி தொல்லைகள் இருக்காது. இதை டாய்லெட்டிற்கு மட்டுமில்லாமல் கிச்சன் சிங்க் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே..!
இதையும் படியுங்கள் ⇒ கேஸ் பர்னர் கருத்து போயிருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |