Kitchen Cleaning Liquid At Home in Tamil
வணக்கம் நண்பர்களே..! என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தாலும் வீட்டு வேலை என்றால் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். அதிலும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சொல்லவே வேண்டாம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை வீட்டில் துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது என்று வேலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அதனால் தான் எங்கள் பதிவின் வாயிலாக தினமும் இல்லத்தரசிகளுக்கு ஒரு அருமையான டிப்ஸை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற சூப்பரான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்திரங்களை பளபளப்பாக மாற்றும் லிக்விட்:
தூக்கி எரியும் முட்டை ஓட்டை வைத்து பாத்திரங்களை பளபளப்பாக மாற்றலாம் வாங்க.
ஸ்டேப் – 1
முதலில் ஒரு கிண்ணத்தில் தூக்கி எரியும் முட்டை ஓடுகளை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் ஏதாவது ஒரு கூல்ட்ரிங்ஸ் 200 ml அளவிற்கு ஊற்றி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள முட்டை ஓடு மற்றும் கூல்ட்ரிங்ஸ் இரண்டையும் சேர்த்து ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
எவ்வளவு அழுக்காக உள்ள சீப்பையும் ஐந்தே நிமிடத்தில் சுத்தம் செய்யலாம்
ஸ்டேப் – 3
பின் அதை ஒரு பவுலில் மாற்றி அதில் ஏதாவது ஒரு டிஷ்வாஷ் லிக்விடு 200 ml அளவிற்கு ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அவ்வளவு தான் பாத்திரங்களை பளபளப்பாக மாற்றும் லிக்விடு ரெடி. இப்போது இந்த லிக்விடை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.
இந்த லிக்விடை ஊற்றி பாத்திரங்களை கழுவி பாருங்கள் பாத்திரங்கள் கண்ணாடி போல் மின்னுவதை நீங்களே காண்பீர்கள்.
கறைப்படிந்த டீ வடிக்கட்டியை நிமிடத்தில் புத்தம் புதுசாக மாற்ற டிப்ஸ்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |