கிச்சனை டக்குனு சுத்தம் செய்ய இந்த Idea மட்டும் போதுமே..! தெரிஞ்சுக்கோங்க யூஸ் ஆகும்..!

Advertisement

Kitchen Cleaning Tips at Home  

அனைவருடைய வீட்டிலும் ஒரு நாளைக்கு கிச்சனில் இரண்டு அல்லது மூன்று வேலை சமைக்க வேண்டிய நிலை இருக்கும். இதில் நாம் கிச்சனில் சமைக்கும் நேரம் என்பதோ மிகவும் குறைவாக தான் இருக்கும்.  ஆனால் சமைத்து முடித்த பிறகு ஒவ்வொரு நாளும் அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினம். அதிலும் குறிப்பாக எண்ணெய் பசை மற்றும் அழுக்கு படிந்த இடத்தை எல்லாம் சுத்தம் செய்வது என்பது சாத்தியமற்ற ஒரு செயலாக இருக்கிறது. அதனால் இன்றைய டிப்ஸ் பதிவில் பெண்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் கிச்சனை மிகவும் எளிமையாக குறைந்த நேரத்தில் சுத்தம் செய்வது எப்படி என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

சமையலறை டிப்ஸ்:

பாத்திரத்தை எடுத்து வைத்தல்:

சமைத்து முடித்த பிறகு சமையலுக்கு எடுத்து பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்தில் சரியாக வைத்து விட வேண்டும்.

பாத்திரத்தை கழுவுதல்:

 சமையலறை டிப்ஸ்

அதன் பின்பு சமைத்த உணவுகளை எல்லாம் மற்றொரு சரியான பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடி போட்டு மூட வேண்டும். அதன் பிறகு மற்ற பாத்திரங்கள் அனைத்தினையும் கழுவ வேண்டும்.

பாத்திரத்தை கழுவிய பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்ட வேண்டும்.

சமையலறையை பெருக்குதல்:

இப்போது கிச்சனை சுத்தமாக குப்பைகள் எதுவும் இல்லாதவாறு பெருக்கி குப்பைகளை அப்படியே ஒதுக்கி வைக்காமல் குப்பை போடும் பக்கெட்டில் போட்டு விட வேண்டும்.

எத்தனை வருடமானாலும் டைல்ஸ் தரை பளிச்சென்று இருக்க இதை செய்திடுங்க..

கிட்சனை சுத்தம் செய்வது:

kitchen cleaning tips in tamil

அடுத்து எண்ணெய் பசை மற்றும் அழுக்கு படிந்துள்ள இடங்களை சுத்தம் செய்ய 1/2 ஸ்பூன் பல்துலக்கும் பேஸ்ட் மற்றும் 1/2 பேக்கிங் சோடா, சிறிதளவு எலுமிச்சை சாறு என இவை அனைத்தினையும் ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இவ்வாறு செய்து முடித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை பயன்படுத்தி கிச்சனை நன்றாக துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு சுத்தமான தண்ணீரால் மற்றொரு துணியினை நனைத்து மீண்டும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இந்த முறையில் துடைத்தால் போதும் கிச்சன் பளிச்சென்று முகம் பார்க்கும் கண்ணடி போல் மாறிவிடும்.

கேஸ் அடுப்பை சுத்தம் செய்தல்:

கிச்சன் சுத்தம் செய்வதற்கு தயார் செய்துள்ள அந்த ஜெல்லை லேசாக ஒரு துணியில் துடைத்து கேஸ் அடுப்பினையும் துடைத்து விடுங்கள். பின்பு மீண்டும் சுத்தமான துணியினை எடுத்து சுத்தமான தண்ணீரில் நனைத்து துடைத்து விடுங்கள்.

30 வருட டைல்ஸ் கறையை 3 ரூபாயில் கிளீன் செய்யலாம்

சிங்க் சுத்தம் செய்தல்:

sink cleaning tips tamil

சிங்கில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகு அதில் வேறு ஏதேனும் குப்பைகள் அடைத்து இருந்தால் அவற்றை எல்லாம் நீக்கி விட வேண்டும். அதன் பிறகு முன்பு சொல்லப்பட்டுள்ள ஜெல்லை வைத்து சிங்கையும் சுத்தம் செய்து விடுங்கள்.

இவ்வாறு செய்து முடித்தால் சிங்க் பளிச்சென்று இருக்கும். ஆனால் சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சிங்கில் தண்ணீர் அதிகம் பயன்படுத்தாமல் இருந்தாலே நன்றாக காய்ந்து போய்விடும்.

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் தினமும் செய்தால் கிச்சன் சுத்தமாக இருக்கும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனில் இருக்கும் ஒட்டடை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement