சமையலறையில் உள்ள வெள்ளை கறை படிந்த உப்பு கறைகளை இப்படி நீக்குங்கள்

Advertisement

சமையலறை வெள்ளை கறை போக என்ன செய்வது.?

சமையலறை அழகாக இருந்தாலே அந்த வீடே அழகாக இருக்கும். ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்துகிறாள் என்பதை அவர் வீட்டு சமையலறை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அந்த காலத்தில் பெண் பார்க்க போனால் சமயலறை பார்த்தலே அந்த பெண் எப்படி என்று அறிந்து திருமணம் செய்வார்களாம். என்ன தான் தினமும் சமையலறையை துடைத்தாலும் அதில் படிந்துள்ள உப்பு கரையை நீக்க முடியாது. இனிமேல் உங்கள் சமைலறையை புதிதாக ஆக்கலாம் எப்படி என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

உப்பு கறையை நீக்கதேவையான பொருட்கள்:

  • ஷாம்பு -1
  • எலும்பிச்சை சாறு- தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்:1

சமையலறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் வீட்டில் லட்சுமி கடாச்சம் கிடைக்கும். வீட்டில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.

ஸ்டேப்:2

முதலில் கறை படிந்த இடத்தை ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். வெள்ளையாக பூத்திருக்கும் இடத்தில் எலுமிச்சை சாற்றை ஊற்றவும். பின் 5 நிமிடம் வரை அப்படியே ஊறவிடவும்.

ஸ்டேப்:3

பின்பு 5 நிமிடம் கழித்து தேய்த்து விடுங்கள். பிறகு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பை உப்பு கறை படிந்த இடத்தில் போடுங்கள்.

ஸ்டேப்:4

பிறகு அந்த இடத்தை நன்றாக தேயுங்கள். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். இப்போ பாருங்க பளிச்சுன்னு ஆகிருக்கும்.

வீட்டில் இருக்கும் சிங்க் பழைய சிங்க் போல் இருந்தால் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். புதிய சிங்க் போல் வந்து விடும். அதே போல் பைப்பில் உள்ள மூடி அழுக்கு படிந்து இருக்கும். இந்த அழுக்குகளுக்கும் மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தலாம். வீட்டில் எங்கெல்லாம் விடாப்பிடியான கறைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸை Follow பண்ணுங்க.

இந்த கிச்சன் Trick மட்டும் தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement