வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் 5 நிமிடம் போதும் சிங்க் அடைப்பை அசால்ட்டா நீக்கி விடலாம்..!

Updated On: October 19, 2023 11:20 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kitchen Sink Adaippu Neenga Tips

வீடு என்றால் அதில் எண்ணற்ற வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் காலை எழுந்த நேரம் முதல் இரவு தூங்கும் நேரம் வரை வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி பார்க்கையில் சமையல் செய்தல், துணி துவைத்தல் என இவற்றை எல்லாம் விட பாத்திரம் கழுவும் வெளியே மிகவும் கடினமானது. ஏனென்றால் சில பாத்திரங்கள் அடிபிடித்து போயிருக்கும் அதனால் அவற்றை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும்.  அந்த வகையில் இவற்றை விட மற்றொரு கடினமான வேலை ஒன்று உள்ளது. அதாவது பாத்திரம் கழுவும் தண்ணீர் ஆனது சிங்கின் வழியாக தான் வெளியே செல்லும். அதனால் இந்த சிங்கில் தான் அடிக்கடி அடைப்பு ஏற்படும், மேலும் சுத்தம் செய்வதும் மிகவும் கடினமாக இருக்கும்.  எனவே இன்றைய பதிவில் சிங்கில் அடைப்பு எப்படி எடுப்பது என்றும், அதில் துறுநாற்றம் வராமல் பார்ப்பது எப்படி என்பதையும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிங்க் சுத்தம் செய்தல்:

முதலில் உங்களது சிங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு பல் துலக்கும் பேஸ்ட் சேர்த்து  அதனுடன் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த ஜெல்லை தொட்டு ஸ்பாஞ்சால் சிங்கை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு சுத்தம் செய்தவன் மூலம் கறை எதுவும் இல்லாமல் சிங்க் ஆனது பளிச்சென்று மாறிவிடும்.

சிங்க் அடைப்பு நீங்க:

  • பேக்கிங் சோடா- 2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  • சுடு தண்ணீர்- 2 கப்
     சிங்க் அடைப்பு

 

முதலில் உங்களுடைய வீட்டில் இருக்கும் சிங்க் ஓட்டையில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கொள்ளுங்கள். பின்பு அதன் மேலே 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து 5 நிமிடம் வரை அப்படி விட்டு விடுங்கள்.

5 நிமிடம் கழித்து 2 கப் சுடு தண்ணீரை அதில் ஊற்ற வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு 10 நிமிடம் கழித்து அதில் 2 கப் அளவிற்கு குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி விடுங்கள்.

இத்தகைய முறையினை நீங்கள் செய்வதன் மூலம் சிங்கில் இருக்கும் அடைப்பு நீங்குவதோடு மட்டும் இல்லாமல் அதில் இருந்து வரும் துறுநாற்றத் தொல்லையும் இருக்காது.

கிட்சனை எப்போதும் பளபளன்னு வச்சுக்கணுமா அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now