Kitchen Sink Cleaning Tips in Tamil
நமது சுத்தமாக வைத்துக்கொண்டோம் என்றாலும் கூட சமையலறையில் உள்ள சிங்கிள் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணம் பெருமாளும் பலர் சாப்பிட்டு விட்டு காய்கறிகளின் சக்கை, தோல் போன்றவற்றை சிங்கிள் போட்டு விடுவார்கள், மற்றும் சித்தூள் சட்னி இவைகளையும் சிங்கிள் கொட்டிவிடுவார்கள் இதனால் சிங்கிள் அடைப்பு பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய வினிகர் உதவுகிறது. சரி இந்த வினிகரை பயன்படுத்தி நமது சமையலறையில் உள்ள சிங்கின் அடைப்பை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- ஒரு அரைலிட்டர் பிளாஸ்ட்டிக் பாட்டில்.
- பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்
- வினிகர் – 1/4 கப்
- நன்கு சுடவைத்த நீர் – அரை வாளி
செய்முறை:
அரைலிட்டர் பாட்டிலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் பாதியளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் பின் அவற்றில் 1/4 கப் வினிகரை ஊற்ற வேண்டும்.
பிறகு இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஊற்றி கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்தவுடன் பாட்டிலில் உள்ள நீர் பொங்கி வரும் அப்பொழுது உங்கள் கைகளை பயன்படுத்தி பாட்டிலை அழுத்தி மூடிக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!
பிறகு சிறிது நேரம் கழித்து பாட்டில் நுரை அடங்கி கேஸ் உருவாகும் அந்த சமையம் உங்கள் கைகளை பாட்டில் இருந்து எடுக்காமல் அப்படியே அடைப்பு பிரச்சனை உள்ள சிங்கிற்கு எடுத்து சென்று மேல் படித்தால் உள்ளதுபோல் சிங்கன் ஓட்டைக்குள் Force-ஆக தண்ணீரை ஊற்ற வேண்டும்.
இப்பொழுது சிங்கிள் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கிருக்கும். இருந்தாலும் அரை வாளி நன்கு கொதித்த தண்ணீரை அந்த சிங்கிள் ஊற்றிவிடுங்கள் இவ்வாறு செய்தால் முழுமையாக அவற்றில் உள்ள அடைப்புகள் நீங்கிவிடும்.
வாரத்தில் ஒரு முறை இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
டிப்ஸ்:
எப்பொழுது சாப்பிட்டு விட்டு சிங்கின் உள்ளே காய்கறிகளின் சக்கை, காய்கறிகளின் குப்பை, டீத்தூள், சட்னி இவைகளை ஊற்றவே கூடாது இவ்வாறு செய்தீர்கள் இது போன்று அடிப்பு பிரச்சனை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு நீங்கள் இதற்காக வீண் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். ஆக வீண் செலவுகளை தவிர்க்க இது போன்ற செயல்களை செய்யாமல் குப்பையில் போடுவது மிகவும் சிறந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |