Kitchen Sink Cleaning Tips
நாம் செய்யும் வேலைகளை பொறுத்தவரை 2 விதமாக இருக்கிறது. ஒன்று வீட்டில் செய்யும் வேலை, மற்றொன்று வீட்டிற்கு வெளியே சென்று பணம் சம்பாதிப்பதற்காக செய்யும் வேலை ஆகும். இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வீட்டு வேலையே அதிக கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால் வீட்டில் பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், பாத்ரூம் கிளீன் செய்தல் மற்றும் மாப் போடுதல் என இதுபோன்ற எண்ணற்ற வேலைகள் இருக்கிறது. அந்த வகையில் இவற்றை எல்லாம் செய்தாலும் கூட பாத்திரம் கழுவும் சிங்கை சுத்தம் செய்தவே மிகவும் கடினம். ஏனென்றால் தினமும் நாம் அந்த சிங்கை பயன்படுத்துவதனால் அது உப்பு கறை படிந்தது போல மாறிவிடும். ஆகையால் அதனை சுத்தம் செய்ய கடினமாக இருக்கும். இனி நீங்கள் கஷ்டப்படாமல் இருக்க 2 நிமிடத்தில் உப்பு கறை படிந்த சிங்கை சுத்தம் செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கிச்சன் சிங்க் உப்பு கறை நீங்க:
கிச்சன் சிங்கில் இருக்கும் உப்பு கறையை நீக்க முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- எலுமிச்சை சாறு- 1/2 ஸ்பூன்
- புளித்த மாவு- 1 கரண்டி
- பாத்திரம் கழுவும் ஜெல்- 1/2 ஸ்பூன்
இப்போது ஒரு பவுலில் 1 கரண்டி புளித்த மாவினை எடுத்துக்கொண்டு அதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பாத்திரம் கழுவும் ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின்பு இரண்டு நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள கலவையினை சிங்கி முழுவதுமாக ஸ்க்ரப்பரால் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். இவ்வாறு தேய்த்து விட்டு பின்பு பாத்திரம் கழுவும் கம்பி நாரினால் மீண்டும் ஒரு முறை தேய்த்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி இதனை அலசி விடுங்கள். அவ்வளவு தான் உங்கள் வீட்டில் உப்பு கறை படிந்த சிங்க் பளிச்சென்று மாறி விடும்.
அதேபோல் பாத்திரம் கழுவும் சிங்கில் சாதம், காய்கறி என இதுபோன்றவையை போடாமல் தவிர்ப்பது நல்லது.
வெறும் 5 நிமிடம் போதும் சிங்க் அடைப்பை அசால்ட்டா நீக்கி விடலாம்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |