Kitchen Tips For the Home in Tamil
வீட்டில் சில வரை வைத்தால் அது சீக்கிரம் கெட்டுவிடும். அது உணவு பொருளாக இருந்தாலும் சரி, அல்லது சமையலுக்கு தேவையான பொருளாக இருந்தாலும் சரி உடனே கெட்டுவிடும், ஆனால் சில உணவு பொருட்களை வைக்கும் விதத்தில் தான் உள்ளது அது கெட்டு போகுமா போகாதா என்பது.
சில பொருட்களை நாம் வேற மாதிரி மாற்றி வைத்தால் கண்டிப்பாக கெட்டுப்போகாமல் வைத்துள்ள கொள்ள முடியும். அதிகளவு அனைவரின் வீட்டிலும் தேங்காய் பாதி திருவி அப்படியே வைப்பார்கள் அது நாளடைவில் கெட்டுவிடும் இனி கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! இது போல் நிறைய ட்ரிக்ஸ் பற்றி பார்ப்போம் வாங்க..!
Kitchen Tips For the Home in Tamil:
டிப்ஸ்: 1
பாதி தேங்காய் திருவி விட்டு பாதி தேங்காயை அப்படியே வைப்பார்கள் அல்லவா அது மறுநாள் பார்த்தல் தேங்காய் கருப்பாக மாறி காளான் பூக்க ஆரம்பிக்கும். இனி கவலை வேண்டாம்.
முதலில் பாதி தேங்காயை எடுத்து அதில் தண்ணீர் இல்லாமல் துடைத்துக்கொள்ளவும், பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து தேங்காய் முழுவதும் தேய்த்து வைத்தால் கெட்டு போகாமல் இருக்கும்.
இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!
டிப்ஸ்: 2
தங்க தோடு குழந்தைகளுக்கு போடுவது வழக்கம் ஆனால் சில நேரத்தில் திருகாணி லூசாக இருக்கும் அப்போது ஒரு துண்டு பூண்டு எடுத்து அதில் திருகாணியை குத்தி சிறிது நேரம் கழித்து தொட்டில் போட்டால் லூசாக இருக்காது.
டிப்ஸ்: 3
வீட்டில் கொட்டாங்குச்சி தூக்கி எரிவது வழக்கம் ஆனால் அதனை நாம் தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். நாம் பாட்டிலில் எண்ணெய் ஊற்றுவது வழக்கம் அதனை எப்போதாவது கீழ் ஊற்றாமல் ஊற்றியது உண்டா இல்லையே. கொட்டாங்குச்சியை நாம் புனல் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முதலில் கொட்டாங்குச்சி எடுத்துக்கொள்ளவும் அதன் மீதி இருக்கும் தூசுகளை கம்பி நார்களை கொண்டு தேய்த்து சுத்தமாக வைக்கவும். பின்பு அதன் கீழ் பக்கம் ஒரு ஓட்டை இருக்கும் அதை கீறி விட்டால் உடைந்து விடும் பின்பு அதனை பாட்டிலில் வைத்து கொட்டாச்சியின் மேல் பக்கம் எண்ணெய்யை ஊற்றினால் கீழ் ஊற்றாமல் இருக்கும்.
டிப்ஸ்: 4
இரும்பு தோசை கைளாக இருந்தால் இது போல் கிளீன் பண்ணுங்க..! இட்லி மாவு எடுத்துக்கொள்ளவும்.
பின்பு தோசை கல்லில் மாவை அப்ளை செய்யவும் செய்து 5 நிமிடம் அப்படியே ஊறவிட்டு தோசைகளின் ஓரம் இருக்கும் தோசையை கத்தியை கொண்டு எடுத்தால் அப்படியே வந்து விடும்.
கம்பி நாரை கொண்டு தேய்த்து கழுவேண்டும். பின்பு உப்பு எடுத்து தோசை கல்லில் போட்டு தேய்த்து கழுவினால் நன்றாக இருக்கும். மறுநாள் காலையில் தோசை சூப்பராக வரும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பாத்ரூமில் உப்பு கரை படிந்த தரையை புதியது போல மாற்ற இந்த Tricks மட்டும் போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |