கோழி குஞ்சு வேகமாக வளர சூப்பரான டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.!

Advertisement

கோழி குஞ்சு| Chicken chick

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் கோழி குஞ்சுகளை சீக்கிரமாக எப்படி வளரவைப்பது என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பெரும்பாலும் கிராம புறங்களில் அதிகமாக கோழிகளை வளர்த்து நகர் புறங்களுக்கு விற்பனை செய்வார்கள். அந்த வகையில் கோழி குஞ்சுகளை எவ்வாறு பராமரிப்பது, அதற்கு எந்த உணவுகளை கொடுத்தல் வேகமாக வளரும் என்பதை பற்றி  நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கோழிகளின் பல்வேறு வகைகள்

 

கோழி குஞ்சு வளராமல் இருப்பதன் காரணம்:

 koli kunju valarpu murai in tamil

கோழி குஞ்சுகள் வேகமாக வளராமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அதற்கு தேவையான புரதச்சத்து, வைட்டமின் இல்லாத உணவுகளை கொடுப்பதால் கோழிக்குஞ்சுகள் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. அடுத்ததாக கோழிக்குஞ்சுகள் இரைப்பை, கல்லீரல் போன்றவற்றியில் பிரச்சனைகள் இருந்தாலும் கோழி குஞ்சுகள் வளருவதில்லை. அதோடு குடல் புழுக்கள் அதிகமாக இருந்தாலும் வளருவதில்லை.

கோழி குஞ்சு வேகமாக வளர:

கோழி குஞ்சுகள் வேகமாக வளருவதற்கு  மாட்டு சாணத்தை கோழி குஞ்சுகள் நிற்கும் இடத்தில் கொட்டி வைத்து அதில் ஒரு ஈரமான கோணி சாக்குகளை அதில் முடி வைப்பதால் அதில் அதிக அளவு புழுக்கள் உற்பத்தி ஆய்க்கிறது. இதனால் கோழிகள் அந்த புழுக்களை சாப்பிடுவதால் அதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

அடுத்ததாக கோழிக்குஞ்சுகளுக்கு  கரையான் பூச்சிகளை உற்பத்தி செய்து கொடுக்கலாம், இதனை சாப்பிடுவதால் அதற்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கிறது. இதனுடைய வளர்ச்சிகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சில கோழிக்குஞ்சுகள் போதுமான சத்துக்கள் கிடைக்காததால் அவை இறந்து விடுக்கிறது. கோழிக்குஞ்சுகள் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு தினமும் காலை, மாலை இரண்டு வேலைகளில் அதற்கு வேக வைத்த முட்டையை உதிர்த்து கொடுக்க வேண்டும். இப்படி செய்த்து வருவதால் அதற்கு தேவையான வளர்ச்சிகள் கிடைக்கிறது.

அதோடு கோழிகுஞ்சுகளுக்கான பண்ணை தீவனங்களோடு முட்டையை கலந்து கொடுப்பதால் ஆரோக்கியமாக இரண்டே வாரங்களில் நல்ல வளர்ச்சி அடைக்கிறது.

வைட்டமின் அதிகமாக உள்ள உணவு பொருட்களை கோழி குஞ்சுகளுக்கு தருவதால் கோழிக்குஞ்சு வேகமாக வளர்வதற்கு உதவியாக இருக்கிறது. புரதசத்துக்கள் அதிகமாக இருக்க கூடிய கம்பு, சோளம், கேழ்வரகு, கருவாடு தூள் போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.

இது போன்ற அதிகப்படியான உணவு பொருட்களை கோழி குஞ்சுகளுக்கு தருவதால், அதிக அளவினால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது அதோடு கோழி குஞ்சுகளின் கல்லீரலை வலுப்படுத்தி, கோழி வளர்ச்சி அடைவதற்கு உதவியாக இருக்கிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement