வெள்ளி கொலுசு அணிவதால் பயன்கள்
இன்றைய பதிவில் பெண்கள் காலில் கொலுசு அணிவதால் நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
மேலும்,வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும் போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.
கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள் :
- வெள்ளி கொலுசு அணிவதால் கல்லீரல் , பித்தப்பை ,சிறுநீரகம் ,சிறுநீரகப்பை,வயிறு போன்ற உறுப்புகளில் உள்ள செயல்திறனை மேம்படுத்துகிறது.
- பெண்கள் கொலுசு அணிவதன் மூலம் கர்ப்பபை இறக்கம் பிரச்சனை ஆகியவற்றை சரிசெய்கிறது.
- பெண்கள் கொலுசு அணிவதன் மூலம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
- வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
- பெண்கள் கொலுசு அணிவதன் மூலம் பெண்களுக்கு இடுப்பு வலியை சரி செய்கிறது.
- வெள்ளி நகை அணிவதால் உடல் சூடு குறையும். பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு வெள்ளி நகை உதவுகிறது.
- வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளி நகை அணிந்தால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படாது. மேலும் வெள்ளி நகை அணிந்திருப்பவர்களின் ஆயுள் கூடும்.
பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும் வலது பக்கமா.. இடது பக்கமா..?
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














