கொய்ங் என்று கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

வீட்டில் கொசு வராமல் தடுப்பது எப்படி.?

நம்முடைய வீட்டில் மாலை நேரங்களில் விளக்கேற்றி மஹாலட்சுமி வீட்டிற்கு வர வேண்டும் என்று வீட்டின் கதவை திறந்து வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் இதுமாதிரி கதவை திறந்து வைப்பதனால் வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வருகிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கொய்ங் என்ற சத்துடன் கொசுவானது வீட்டிற்குள் வந்து விடுகிறது. இவ்வாறு வீட்டிற்கு வருவதோடு மட்டும் இல்லாமல் நம்மையும் கடித்து இரத்தத்தினை உறிஞ்சுகிறது. இத்தகைய பிரச்சனை நம்மில் பெரும்பாலான வீட்டில் இருந்து கொண்டு தான் உள்ளது. அதனால் இன்று கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க என்ன செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். எனவே பதிவை முழுவதுமாக படித்து கொசுவை எப்படி நிரந்தரமாக விரட்டுவது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கொசு வராமல் இருக்க:

முதலில் கொசுக்கள் நம்முடைய வீட்டிற்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதேசமயம் ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் ஒட்டடை மற்றும் வேறு ஏதேனும் தூசி மற்றும் பாத்திரங்களில் தண்ணீர் ஆனது திறந்தும்  இருக்கக் கூடாது.

உங்களுடைய வீட்டினை சுற்றி சுத்தமாகவும், தண்ணீர் எதுவும் தேங்காமலும் பார்த்து கொண்டால் கொசுக்கள் வராது.

ஏனென்றால் வீடு சுத்தமாக இல்லை என்றாலோ அல்லது அதிகமாக இடங்களில் தண்ணீர் திறந்து இருந்தாலோ அந்த இடத்தில் தான் கொசுக்கள் அதிகமாக வரும்.

Kosu Varamal Iruka Tips:

 வீட்டில் கொசு வராமல் தடுப்பது எப்படி

பொதுவாக சாதாரணமாக வீட்டில் தண்ணீர் திறந்து இருந்தால் அந்த இடத்திற்கு அதிகமாக கொசுக்கள் வரும். அதுவே சோப்பு தண்ணீர் என்றால் அதிகமாக கொசுக்கள் அங்கு வராது.

அதனால் ஒரு பவுலில் சோப்பு தண்ணீரை நன்றாக கலந்து கொசுக்கள் அதிகமாக வரும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதனால் கொசுக்கள் அந்த தண்ணீர் வந்து அமரும் போது உடனே இறந்து போய்விடும். அடுத்த முறை மற்ற கொசுக்களும் வீட்டிற்குள் வராது.

வீட்டில் தொல்லை செய்யும் எலியை நிரந்தமாக விரட்ட அரிசி மாவு மட்டும் போதும் 

கொசுவை விரட்ட மிக எளிமையான முறை:

 கொசு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

வீட்டில் கொசுக்கள் வராமல் இருக்க தினமும் நாம் பயன்படுத்தும் காபி பவுடர் ஆனது சிறந்த ஒன்றாக பயன்படுகிறது. அதனால் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபி பவுடர் கலந்து அந்த தண்ணீரை கொசுக்கள் அதிகமாக வரும் இடத்தில் வைத்து விடுங்கள்.

காபி பொடியின் இத்தகைய வாசனைக்கு கொசுக்கள் என்பது வீட்டிற்குள் வராமல் அப்படியே சென்று விடும்.

கொசு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்:

kosu thollai neenga

மாலை நேரங்களில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் கொசுக்கள் வராது. ஏனென்றால் கொசுக்களுக்கு வாசனை என்பது சுத்தமாக ஆகாத ஒன்றாக உள்ளது. ஆகையால் இவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்கள் வருவதை தடுக்கலாம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement