கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி..?

Advertisement

கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது என்னவென்றால் கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி.? என்பதை பற்றித்தான். நாம் அனைவரின் வீட்டிலும் பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த கொசுக்கள் தான் அப்படிப்பட்ட இந்த கொசுக்களை விரட்ட நாமும் பல வழிகளை கையாண்டிருப்போம், அவை எவற்றினாலும் பயன் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இந்த பதிவில் உள்ளப்படி நீங்கள் செய்து பார்த்தால் உங்கள் வீட்டில் கொசுத்தொல்லை முற்றிலும் குறையும்.

கொசுத்தொல்லையை போக்க வீட்டிலேயே மருந்து:

தேவையான பொருட்கள் :

முதலில் நமது மருந்திருக்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  • வேப்பிலை – 2 கைப்பிடி அளவு 
  • பூண்டுதோல் – 2 கைப்பிடி அளவு 
  • சூடம் – 10
  • தசாங்கம் – 4
  • ஜவ்வாது – 1 சிட்டிகை 

செய்முறை :

ஸ்டேப் – 1:

kosu thollai neenga tips in tamil

முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 2 கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து வெயிலில் காயவைத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துகொள்ளவும். பின்பு அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். பொதுவாக வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி என்பதாலும் அதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை கொள்ளும் என்பதாலும் நாம் அதனை பயன்படுத்துகிறோம்.

ஸ்டேப் – 2:

home remedies for mosquito control in tamil

அடுத்து நாம் எடுத்துவைத்திருந்த 2 கைப்பிடி அளவு பூண்டுதோலையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துகொள்ளவும். பின்பு இந்த பூண்டுதோல் பொடியையும் வேப்பிலை பொடியை கொட்டி வைத்திருக்கும் அந்த கிணத்திலேயே கொட்டிக்கொள்ளவும்.

ஸ்டேப் – 3:

how to avoid mosquitoes in home naturally in tamil

பின்பு நாம் எடுத்துவைத்திருக்கும் 10 சூடம் மற்றும் 4 தசாங்கம் இவற்றையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துகொள்ளவும். இதனையும் அந்த வேப்பிலை பொடி மற்றும் பூண்டு பொடியை கொட்டிவைத்திருந்த அதே கிண்ணத்தில்  கொட்டிக் கொள்ளவும்.

how to prepare mosquitoes repellent at home in tamil

பிறகு இதனுடன் நாம் எடுத்துவைத்திருந்த 1 சிட்டிகை ஜவ்வாதையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் ஊற்றி நன்கு கலந்து ஒரு உருண்டை போல உருட்டிக்கொள்ளவும். பின்பு இதனை சிறிய சிறிய உருண்டைகளாக செய்து வெயிலில் காயவைத்து கொள்ளவும்.

how to prepare mosquitoes killer spray at home in tamil

பின்பு உங்களுக்கு தேவைப்படும்போது அதலிருந்து ஒரு உருண்டையை எடுத்து ஒரு அகல் விளக்கில் வைத்து அதன் மேலே ஒரு சூடத்தை வைத்து ஏற்றிவிட்டால் சூடம் அணைந்தவுடன் அதிலிருந்து வந்த நெருப்பினால் நாம் வைத்திருக்கும் அந்த உருண்டைலிருந்து வரும் புகை கொசுக்களை கொன்றுவிடும்.

குழந்தையின் கொசுக்கடி தடிப்புகளை சரி செய்ய சிறந்த வழி

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement