கொசு தொல்லை அதிகமாக இருக்கா அப்போ இந்த செடியை வீட்டில் வைத்து பாருங்க..!

Advertisement

உடலில் கொசு கடிக்காமல் இருக்க

இன்றைய காலத்தில் கொசு தொல்லை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் பார்க்கும் இடமெல்லாம் கொசுவாக இருக்கும். அதனை சரி செய்ய எவ்வளவோ வேலைகள் செய்தாலும், அந்த கொசுவை விரட்ட முடியாமல் தவித்து போகிறீர்கள். நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை. கொசு தொல்லையை நீங்க இன்றைய பதிவில் அருமையான செய்தியை வெளியிட்டு உள்ளோம். அதனை இடைவெளி இல்லாமல் முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சிட்ரோனெல்லா செடி: 

 உடலில் கொசு கடிக்காமல் இருக்ககொசு தொல்லையை அகற்றுவதற்கு சிட்ரோனெல்லா தாவரம் பெரிதும் உதவுகிறது. அதிலும். சிட்ரோனெல்லா என்ற இந்த செடியை வீட்டில் நடுவதன் மூலம் செடியின் வாசனைக்கு கொசுக்கள் வராது.

சிட்ரோனெல்லா செடியை வீட்டின் ஜன்னல், கதவுகள் மற்றும் வெளி புறத்தில் வைப்பதனால் கொசு தொல்லை இருக்காது.

ரோஸ்மேரி செடி: 

 kosu thollai neenga tamil tipsரோஸ்மேரி செடி எண்ணெய் பசையாக இருப்பதால் கொசுக்களை விரட்டுவதற்கு உதவுகிறது. இந்த செடி 4 மற்றும் 5 அடி வளரும் தன்மையை கொண்டது. இதனை குளிர்காலத்தில் வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் அதன் பூவானது அழகாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொசு தொல்லை அதிகமாக இருக்கும் பொழுது ரோஸ்மேரி எண்ணெய் 4 சொட்டு எண்ணெய், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கை மற்றும் கால் பகுதியில் தேய்த்தால் கொசு கடிக்காமல் இருக்கும்.

கொசு தொல்லை அதிகமாக இருக்க அப்போ இந்த செடியை வீட்டில் வைத்து பாருங்க..!

ஜெரனியம் செடி: 

 kosu thollai neengaகொசுக்களை விரட்டும் மற்றோரு செடியாக ஜெரனியம் உள்ளது. அதிலும் ஜெரனியம் செடி வாசனையாகவும், அழகாகவும் இருக்கும். இந்த ஜெரனியம் செடியை வீட்டில்  கொசு அதிகமாக இருக்கும் இடத்தில் நடுவதன் மூலம் கொசுக்கள் காணாமல் போகும் நிலை எற்படும்.

துளசி செடி: 

 கொசு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும் துளசி செடி மருந்துகளுக்கு மட்டுமின்றி கொசு தொல்லையை அகற்றுவதற்கும் பெரிதும் உதவுகிறது. நறுமணத்தை பரப்பும் செடியாக துளசி செடி உள்ளது. இந்த துளசி செடியை வீட்டின் முன் மற்றும் பின் பகுதியில் நடுவதன் மூலம் கொசுக்களை அகற்றலாம். கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு துளசி செடி பெரிதும் உதவுகிறது.

வீட்டில் கொசு தொல்லை அதிகம் இருக்கிறதா..? அப்போ இந்த 2 பொருள் மட்டும் போதும் கொசு வரவே வராது..!

லெமன் பாம் செடி:

 kosu thollai neenga tamil tipsலெமன் பாம் செடியானது கொசுக்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதற்கு உதவுகிறது. இந்த செடியானது பரந்து விரிந்து வளரும். இந்த செடியை வீட்டின் முன் பகுதியில் வளர்த்து வர வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதன் இலையை எடுத்து கசக்கி  கொள்ளவும். இந்த சாற்றை கை மற்றும் கால்களில் தேய்த்து கொள்வதன் மூலம் கொசுக்கள் நம் மீது அண்டாமல் இருக்கும்.

பூண்டு செடி : 

 kosu thollai neengaகொசுவை வேகமாக விரட்டும் தன்மை பூண்டுக்கு உள்ளது. பூண்டு செடியை வீட்டின் வைப்பதனால் கொசு தொல்லைகள் முற்றிலும் நீங்கி விடலாம்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement