இதை மட்டும் செய்தால் போதும், கொசு தொல்லை, இனிமேல் இருக்காது.!

kosu thollai tips in tamil

 கொசு கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.?

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில்  கொசு தொல்லையில் இருந்து விடுபட ஒரு அருமையான டிப்ஸ் பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக கொசு தொல்லையினால்  வீட்டில் வலைகள் அடித்து வைத்தாலும், அதையும் மீறி அதிகமாக கொசுக்கள் வருகின்றன. பெரும்பாலும் கொசு தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக All out , குட் நைட் போன்ற Liquid -களை பயன்படுத்தி வருகிறோம். இதனால் கொசுவின் தொல்லைகள் ஒழிந்து விடும். ஆனால் இதனை நாம் சுவாசிப்பதினால், நமக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைள் ஏற்படும். எனவே நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கொசுக்களை எப்படி  விரட்டுவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

கொசுக்களை விரட்ட இந்த விளக்கை மட்டும் வீட்டில் ஏற்றுங்கள்.. கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க 100% ரிசல்ட் கிடைக்கும்..!

கொசு தொல்லை நீங்க டிப்ஸ்: 1

தேவையான பொருட்கள்:

  1. சாம்பிராணி தூள் – 1 ஸ்பூன் 
  2. கம்யூட்டர் சாம்பிராணி – 1 
  3. வேப்ப எண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன் 
  4. வெங்காயம்- 1
  5. ஊசி மற்றும் நூல் 

செய்முறை:

முதலில் ஒரு சிறிய தாளிப்பு கரண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதில் சாம்பிராணி  தூள், வேப்ப எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நாம் கலந்து வைத்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடம் கலக்கி விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து  ஆறவிடவேண்டும்.

அடுத்ததாக ஒரு வெங்காயத்தை எடுத்து கொண்டு, அதில் ஊசி நூலை கோர்த்து, வெங்காயத்தின் நடுப்பகுதியில், கோர்க்க வேண்டும். கோர்த்த பிறகு , அந்த நூல் உருவிக்கொண்டு வராமல் இருக்க, ஒரு நாட் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தை சுற்றி, ஊசியை வைத்து சின்ன சின்ன ஓட்டை போட்டுக்கொள்ள வேண்டும்.

பிறகு நாம் தயார் செய்து  வைத்த கலவையை, வெங்காயம் முழுவதும் தடவ வேண்டும்.  தடவிய பிறகு, கொசுக்கள் எந்த இடத்தில் அதிகமாக இருக்கின்றதோ, அங்கு அதை கட்டி தொங்கவிட வேண்டும். இப்படி செய்வதினால்,  அந்த வெங்காயம் மற்றும்  வேப்ப எண்ணெய் வாசனைக்கு வரவே வராது.

கொசு தொல்லை நீங்க டிப்ஸ்: 2

தேவையான பொருட்கள்:

  1. கம்யூட்டர் சாம்பிராணி- 1
  2. பூண்டுதோல்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் கம்யூட்டர் சாம்பிராணி எடுத்து கொள்ளவும். அதில் நெருப்பை உண்டாக்கி அதன் மேல் பூண்டு தோலை போட வேண்டும்.

இப்படி செய்வதினால் கொசுக்கள் இந்த வாசனைக்கு வராது, மேலும் ஆஸ்துமா பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டில் இது போல செய்வதினால், அவர்களுக்கும் எந்த விதமான பாதிப்புகளும் வராது. இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் செய்து கொசுவை விரட்டுங்கள்.

இதையும் படியுங்கள் 👇

கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி..?
உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கா..! இதோ இயற்கையான முறையில் கொசுவை அழிப்பதற்கு வழிகள்

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil