வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கொசுவை விரட்டுவதற்கு கொசு பத்திக்கும், ஆல் அவுட்டுக்கும் பாய் சொல்லுங்க..

Updated On: May 31, 2023 10:24 AM
Follow Us:
kosuvai viratta enna seivathu
---Advertisement---
Advertisement

கொசு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

வீடு என்றாலே கொசு, ஈ, கரப்பான் பூச்சி போன்ற தொல்லைகள் தான் இருக்கும். இதனை கட்டுப்படுத்துவதற்கான நாமும் பல மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். இதில் முக்கியமாக கொசு தொல்லை தான் தாங்க முடியாது. மிக சிறிய அளவில் கொசு இருந்தாலும் அவை கடித்தால் நம்மால் தாங்க முடியாது. அதுமட்டுமில்லாமல் ஊசி போட்டால் கூட தாங்கி கொள்ளலாம், போல இந்த கொசு கடித்தால் தாங்க முடியவில்லை என்று கூறுவார்கள். கொசு தொல்லை தாங்க முடியாததால் கிரீம்,லீகுய்டு போன்று கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் தான் இன்றைய பதிவில் கொசுவை ஒழிப்பதற்கு இயற்கையான முறையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வேப்பிலை:

கொசு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

ஒரு மண் சட்டியில் பச்சை வேப்பிலையை சேர்த்து கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து தூவி கொள்ளவும். இதை எரிய விடாமல் புகைக்க விடவும். இதை வீடு முழுவதும் காட்டி விட்டு ஒரு ஓரமாக வைத்து கொள்ளவும். முக்கியமாக Fan-யை போட கூடாது. வேப்பிலையின் வாசத்திற்கு கொசுக்கள் வராது.

புதினா:

கொசு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

புதினா இலைகளை அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இதனை வீடு முழுவதும் கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து விடவும்.

கற்பூரவல்லி மற்றும் கற்றாழை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.  கொசுக்கள் அதிகமாக வரும் இடத்தில் இதனை தெளித்து விடவும். இதன் மூலம் கொசு வருவதை தடுக்கலாம்.

ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு ஈ கூட இருக்காது

துணி பவுடர்:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடரை சேர்த்து கலந்து விடவும். நன்றாக நுரை பொங்கும் அளவிற்கு இருக்க வேண்டும். இதனை கொசுக்கள் அதிகமாக வரும் இடத்தில் வைத்து விட்டால் அதில் கொசுக்கள் விழுந்து விடும்.

முக்கியமாக செய்ய வேண்டியவை:

வீட்டை சுற்றி தன்னீர் தேங்கி இலலாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தண்ணீர் தேங்கி கிடந்தால் கொசுக்கள் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இரண்டாவதாக மாலை நேரத்தில் வீடு கதவு, ஜன்னல் போன்றவற்றை மூடி வைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள ஈ மற்றும் கொசுக்களை விரட்ட இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now