கொசுவை விரட்ட என்ன வலி | Kosuvai Viratta Tips in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கொசுவை எப்படி அழிப்பது என்று தெரிந்துகொள்வோம். கொசுவை விரட்டுவதற்காக கொசு பத்தி, மின்சாரத்தில் வர கூடிய கொசு விரட்டி இயந்திரங்கள் என்று பல முறைகளில் பயன்படுத்துக்கிறோம். இது மாதிரி பயன்படுத்துவது நம் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அதாவது நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இந்த மாதிரி கொசு விரட்டிகளை பயன்படுத்தாதீர்கள். ஊசி போடும் வலியை விட கொசு கடிக்கும் வலியை தாங்க முடியாது. கொசு அதிகமாக கடித்தால் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் கொசுவை எப்படி ஒழிப்பது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ குழந்தையின் கொசுக்கடி தடிப்புகளை சரி செய்ய சிறந்த வழி..!
கொசுவை விரட்ட மிக எளிமையான முறை:
துளசி சாறு பயன்கள்:
துளசி வாசத்திற்கு கொசுக்கள் வராது. அதனால் துளசி அரைத்து சாறாக எடுத்துக்கொள்ளுங்கள். துளசி சாற்றை ஒரு பாட்டிலில் வைத்து ஸ்பிரே மாதிரி வீட்டின் உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் பகுதியில் அடியுங்கள். கொசுக்கள் வராது.
கொசுவை விரட்ட பூண்டு:
பூண்டின் வாசனைக்கு கொசு வராது. பூண்டை நச்சு எடுத்து கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நச்சிய பூண்டை சேர்த்து கொதிக்க வேண்டும். கொதித்து ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் இதை வீட்டின் உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் அல்லது கொசு எங்கேயெல்லாம் வருமோ அந்த இடத்தில் பூண்டு ஸ்ப்ரேஅடியுங்கள்.
கொசுவை விரட்ட கற்பூரம்:
கற்பூரத்தை நல்லா தூளாக ஆக்கி கொள்ள வேண்டும். தூளாக்கிய கற்பூரத்தை வீட்டின் மூளை முடுக்குளில் தூவ வேண்டும். இந்த கற்பூர வாசனைக்கு கொசுக்கள் வராது.
தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை கரைத்து கை, கால்களில் தடவினால் கொசுக்கள் கடிக்காது.
கொசுவை விரட்ட வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணையையும், விளக்கு எண்ணையையும் சம எடுத்து கலந்து கொள்ளவும். இந்த எண்ணையை கை, கால்களில் தடவி வர கொசுக்கள்உங்களை நெருங்காது.
கொசுவை விரட்ட வேப்பிலை:
வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளை ஒரு கையளவு எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அரைத்த பேஸ்ட்டையும் சேர்த்து காய்ச்ச வேண்டும். ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வீடு முழுவதும் தெளிக்கலாம். இந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் எதாவது ஒன்றை செய்தலே போதும் கொசுக்கள் உங்களை நெருங்காது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |