நீண்ட நாட்களுக்கு கொத்தமல்லி பிரெஷா இருக்க என்ன செய்ய வேண்டும்

Advertisement

கொத்தமல்லி நீண்ட நாட்கள் வர 

பெரும்பாலான சமையல்களில் கொத்தமல்லி சேர்க்கப்படுகிறது. இவை அழகை கூட்டுவது மட்டுமில்லமால் சுவையையும் அதிகரிக்க செய்கிறது. இதனால் நாம் கடையிலிருந்து கொத்தமல்லியை வாங்கி வருவோம். அப்படி வாங்கும் கொத்தமல்லியானது ஒரு 2 நாட்களுக்கு தான் பசுமையாகஇருக்கும். அதன் பிறகு வாடி போகிவிடும். பிரிட்ஜ் இருக்கும் வீட்டில் 15 நாட்களுக்கு வைத்திருப்பார்கள். அதன் பிறகு அவர்களும் வைத்திருக்க முடியாது. அதனால் தான் இந்த பதிவில் கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்:1

சில பேர் கொத்தமல்லி வாங்கி வந்த உடனேயே கழுவி விட்டு ஸ்டோர் செய்து வைப்பார்கள். இதனால் கொத்தமல்லியானது சீக்கிரம் வீணாகிவிடும். அதனால் எப்பொழுதுமே கொத்தமல்லி வாங்கி வந்த உடன்கழுவாமல் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

ஒரு வருடமானாலும் தேங்காய் கெட்டு போகாமல் இருக்க சால்ட் மட்டும் போதுமா 

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்:2

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்

கொத்தமல்லியின் தண்டு பகுதிகளை நறுக்கி விட்டு கொத்தமல்லியை ஒரு ஈர துணியில் வைத்து ஒரு டப்பாவில் வைத்து விட வேண்டும். இது போல வைப்பதினால் நீண்ட நாட்கள் கொத்தமல்லி வீணாகாமல் இருக்கும். முக்கியயமாக டப்பாவில் காற்று போகாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்:3

கொத்தமல்லியின் வேர் பகுதிகளை நறுக்கி விட்டு சிறியதாக நறுக்கி கொள்ளவும். இதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் சேர்த்து டப்பாவிலோ அல்லது பிளாஸ்டிக் பையிலோ வைத்து விட வேண்டும்.

ஒரு டப்பா எடுத்து கொள்ளவும், அதில் பாதியளவு தண்ணீரை நிரப்பி கொள்ளவும். இதில் கொத்தமல்லியின் வேர்கள் தண்ணீரில் படும்படி வைத்து கொள்ளவும்.

மேலே கூறப்பட்டுள்ள டிப்ஸ்களில் ஏதவாது ஒரு டிப்ஸை பயன்படுத்தினாலே கொத்தமல்லியை மாதக்கணக்கில் கெட்டு போகமால் வைத்திருக்கலாம்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement