15 நாட்கள் ஆனாலும் கொத்தமல்லி இலை வீணாகமல் இருக்க டிப்ஸ்

Advertisement

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்

சமையலுக்கு ருசியை கொடுப்பதற்காக பல் பொருட்களை பயன்படுத்துவோம். அதில் ஒன்று தான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லி இலையை அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் நாள்பட வைத்திருக்க முடியாது. அடிக்கடி வாங்க வேண்டியிருக்கும். அப்படியே வாங்கி வந்தாலும் ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் தான் இலை பிரெஷாக இருக்கும். அதன் பிறகு இலை வாடிவிடும். பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் வீட்டில் 10 நாட்கள் வேண்டுமானாலும் வைத்திருப்பார்கள். அதனால் இந்த பதிவில் பிரிட்ஜ் இல்லாவிட்டாலும் கொத்தமல்லியை 15 நாட்களுக்கு வீணாகாமல் வைத்திருப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்:

டிப்ஸ்:1

கொத்தமல்லி வீணாகாமல் இருக்க டிப்ஸ்

நீங்கள் கடைகளில் இருந்து வாங்கி வரும் கொத்தமல்லி இலைகளில் நல்ல இலைகள் தனியாகவும், கெட்டு போன இலைகள் தனியாகவும் மாற்ற வேண்டும்.

அடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பா எடுத்து கொள்ளவும். அதில் பாதியளவு தண்ணீர் நிரப்பி கொள்ளவும். நல்ல கொத்தமல்லி இலைகளின் வேர் பகுதியை உள்ளே வைக்க வேண்டும். வேர் பகுதி இல்லாமல் தண்டு மற்றும் இலைகள் தண்ணீரில் பட்டால் சீக்கிரம் கொத்தமல்லி இலைகள் வீணா போகிவிடும்.

இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒரு மாற்ற வேண்டும். இப்படி நீங்கள் செய்வதால் நாள்பட கொத்தமல்லி இலை வீங்காமல் இருக்கும்.

சமையலில் உப்பு அதிகரித்தால் இதை செய்து விட்டால் ருசியாக இருக்கும்

டிப்ஸ்:2

கொத்தமல்லி இலைகளை நன்றாக கழுவிட வேண்டும், அதில் நல்ல கொத்தமல்லி இலைகள் தனியாகவும், கெட்டு போன கொத்தமல்லி இலைகள் தனியாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.

நல்ல கொத்தமல்லி இலைகளை எடுத்து வேர் பகுதியை நறுக்கி விட வேண்டும். இதனை ஒரு ஈர துணியில் வைத்து காற்று புகாதவாறு வைத்து கொள்ள  வேண்டும்.

இது போல செய்வதினால் கொத்தமல்லி இலையானது நாள்பட கொத்தமல்லி வீணாகாமல் பிரெஷாக இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement