Kulambu Milagai Thool Ingredients in Tamil
தினமும் வீட்டில் குழம்பு வைப்பது வழக்கம் ஆனால் தினமும் வீட்டில் ஒரே குழம்பை வைப்பதில்லை என்பது உண்மை..! வாரம் 7 நாட்கள் வைக்கும் குழம்பில் புளிக்குழம்பு மீன் குழம்பு இல்லாமல் இருக்காது. அந்த குழம்பு வைக்க தேவையான பொருட்கள் என்றால் அது குழம்பு தூள் தான், சிலர் மிளகாய் தூள் தனியாக மல்லி தூள் தனியாக போடுவார்கள் ஆனால் இதுபோல் சேர்த்து சமைத்தால் தான் குழம்பில் ருசி இல்லாமல் போகிறது.
அந்த காலத்தில் தான் அனைத்து மளிகை பொருட்களை சேர்த்து அரைத்து அதனை குழப்புகளுக்கு சேர்ப்பார்கள் அல்லவா? இப்போது யாரும் அப்படி இருப்பதில்லை காரணம் இது கணினி காலம் ஆச்சே..! இனி யார் வீட்டிலில் குழம்பு வைத்தால் குழம்பு நல்லா இல்லை என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால் வீட்டிலேயே தூளை அரைத்து சாப்பிடுங்கள். குழம்பு ருசியாக இருக்கும். அதற்கு தேவையான பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்.
Kulambu Milagai Thool Ingredients in Tamil:
♦ மல்லி – 250 கிராம்
♦ வரமிளகாய் –125 கிராம்
♦ சீரகம் – 25 கிராம்
♦ மிளகு – 25 கிராம்
♦ கடுகு – 25 கிராம்
♦ வெந்தயம் – 10 கிராம்
♦ மஞ்சள்- 50 கிராம்
♦ கருவேப்பிலை – 1 கப்
♦ கடலைப்பருப்பு – 20 கிராம்
♦ உளுந்து- 20 கிராம்
♦ துவரம்பருப்பு – 20 கிராம்
♦ பெருங்காயம் – சிறிதளவு
இந்த பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் அரைத்தால் ஒரு மாதத்திற்கு கெட்டுபோகாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வீட்டிலேயே கரம்மசாலா செய்ய தேவையான பொருட்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |