Kurattai Varamal Thadukka Tamil
இன்று இருக்கும் காலக்கட்டத்தில் நிறைய மக்கள் இருக்கும் பிரச்சனை தான் குறட்டை விடும் பிரச்சனை தான். இந்த குறட்டையை நிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, நமக்கு தெரியாமலேயே குறட்டை வந்துவிடுகிறது. இதன் காரணமாக நமது கூட உறங்குபவர்கள் அடுத்த நாள் காலை நம்மிடம் சொல்லும்போது தான் நமக்கு அது தெரியவரும். இந்த குறட்டையை குறைப்பதற்க்கான டிப்ஸை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க குறட்டையை குறைக்க டிப்ஸை பற்றி இன்று நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
குறட்டையை குறைக்க டிப்ஸ்..! Kurattai Varamal Iruka Enna Seivathu
உடல் எடையை குறைக்கவும்:
உடல்பருமன் உள்ளவர்கள் குறட்டை விட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டை பகுதியில் கொழுப்புத் திசுக்கள் மற்றும் நலிவான தசை இருந்தால் குறட்டை ஏற்படும். எனவே உடலை குறைப்பது மிகவும் அவசியம்.
மது அருந்தக்கூடாது:
மது தொண்டை தசைகளை லேசாக்கி, குறட்டை ஏற்பட காரணமாக அமைவதால் மது அருந்துவதை தவிர்க்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி மாவு, தோசை மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பக்கவாட்டில் படுக்கவும்:
நேராக படுக்காமல் பக்கவாட்டில் படுக்கவும், நேராக படுத்தால் குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே படுக்கும் போது எப்போதும் பக்கவாட்டில் படுக்க பழகிக்கொள்ளுங்கள்.
பழங்கள்:
உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக்கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப்பழம், கமலாப்பழம் ஆகியவை சாப்பிடலாம்.
தலை உயர்த்தி படுக்கவும்:
தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கவும். தலையை உயர்த்தி வைத்து தூங்கவும். தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீராக சுவாசிக்கலாம்.
புகை பிடிக்காதீர்கள்:
புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாக்குவதால் புகை பிடிப்பதை தவிர்க்கவும். புகை பிடித்தால் குறட்டை தொல்லை அதிகரிக்கும்.
தேன் இஞ்சி தேநீர்:
எரிச்சல் சுரக்க செய்வதால் இஞ்சி தொண்டைக்கு இதமளிக்கும். தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும்.
தூக்க மாத்திரை வேண்டாம்:
அதிகமாக தூங்கினால் குறட்டை ஏற்படும் எனவே தூக்க மாத்திரைகளை தவிர்க்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, டைல்ஸ் தரையாக இருந்தாலும் சரி கிளீன் செய்ய இந்த Liquid போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |