லேப்டாப்பில் படிந்து இருக்கும் தூசியை இப்படி தான் சுத்தம் செய்யனுமா..!

Advertisement

Laptop Cleaning Tips

நோட்டு புத்தகம் மற்றும் பேனா வைத்து வேலை செய்த காலங்கள் எல்லாம் தற்போது மாறி, மொபைல், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் என இவற்றை எல்லாம் வைத்து வேலை செய்யக்கூடிய காலம் தற்ப்போது வந்து விடுகிறது. ஏனென்றால் தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பது அதிகமாகி கொண்டே இருப்பதனால் மக்கள் அனைவரும் அதற்கு ஏற்ற மாதிரியான கல்வி வளர்ச்சியினை பெற்று விடுகிறார்கள். ஆகவே பெரும்பாலும் இந்த காலத்தில் எல்லா வேலைகளும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் தான் இருக்கிறது. அந்த வகையில் லேப்டாப்பில் கூட வேலை செய்து விடலாம், ஆனால் அதனை சுத்தம் செய்வது என்பது முடியவே முடியாது. ஏனென்றால் அதன் இடுக்குகளில் எல்லாம் தூசிகள் படிந்து இருப்பதனால் அதனை சுத்தம் செய்வது கடினமாக இருக்கிறது. எனவே இன்று லேப்டாப் எப்படி எளிய முறையில் சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

லேப்டாப் சுத்தம் செய்யும் முறை:

டிப்ஸ்- 1

லேப்டாப்பை சுத்தம் செய்வதற்கு முன்பாக மின்சார வசதி இணைப்புடன் இல்லாதவாறு Off செய்து விட வேண்டும். அதன் பிறகு 1 துணியினை எடுத்து லேப்டாப் முழுவதும் நன்றாக துடைத்து விட வேண்டும்.

டிப்ஸ்- 2

how to clean laptop in tamil

இப்போது ஒரு காட்டன் துணியில் 2 சொட்டு அளவிற்கு ஜன்னல் சுத்தம் செய்ய வைத்த இருக்கும் ஜெல்லை சேர்க்க வேண்டும். பின்பு அந்த துணியை வைத்து லேப்டாப் திரையை அதாவது டிஸ்பிலேவை மிகவும் லேசாக துடைக்க வேண்டும்.

அதன் பிறகு மற்றொரு காய்ந்த காட்டன் துணியினால் லேப்டாப் திரையை துடைக்க வேண்டும்.

டிப்ஸ்- 3

லேப்டாப் Keyboard-ஐ சுத்தம் செய்ய ஒரு சிறிய பிரஷ் கண்டிப்பாக தேவைப்படும். ஆகவே முதலில் உங்களது Keyboard-ஐ லேசாக கீழ் நோக்கி அசைக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் தூசி எல்லாம் கீழே விழும்.

அதன் பிறகு ஒரு பிரஷை எடுத்துக்கொண்டு அதனை வைத்து Keyboard-ல் இருக்கும் இடைவெளிகளையும், அதன் சுற்றி இருக்கும் ஓரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து விட்டு மீண்டும் ஒரு முறை நல்ல டிஷு பேப்பர் அல்லது காட்டன் துணியால் துடைக்க வேண்டும்.

துருப்பிடித்த பாத்ரூம் பைப்களை 10 நிமிடத்தில் பளிச் என்று மாற்ற என்ன செய்யலாம்

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement