தூக்கி வீசும் எலுமிச்சை தோலில் இவ்வளவு பயன் இருக்கிறதா.!

Advertisement

எலுமிச்சை தோலின் பயன்கள் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஒரு அருமையான டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது தூக்கி வீசப்படும் எலுமிச்சை தோலை கொண்டு சில அருமையான டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாவாகவே நாம் எலுமிச்சை சாதம் , எலுமிச்சை பானங்கள்  செய்வதற்க்காக எலுமிச்சை பழத்தை உபயோகித்து அதனுடைய தோலை குப்பையில் வீசிவிடுவோம். அப்படி தூக்கி வீசப்படும் எலுமிச்சை தோலில் அருமையான சில டிப்ஸ்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டால் நீங்களும் இனிமேல் இந்த எலுமிச்சை தோலை குப்பையில் வீசமாட்டிர்கள்.

வீட்டிலேயே சுவையான கெட்டி தயிர் இது போல செய்து பாருங்கள்..!

எலுமிச்சை தோலின் பயன்கள்:

டிப்ஸ்:1 

உங்கள் வீட்டில் உள்ள தோசைக்கல்லில் சுற்றி இருக்கும் அழுக்குகளை எடுப்பதற்கு ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து அதில் சமையல் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து அந்த தண்ணீரில் கலந்து கொள்ளவேண்டும். அதன்பிறகு அடுப்பை மிதமான சூட்டில் தேசை கல்லை  வைத்து, அந்த எலுமிச்சை தோலில் உப்பு சேர்த்து தோசைக்கல் மீது நன்றாக தடவ வேண்டும்.

தோசைக்கல்லில் தடவிய பிறகு தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யவேண்டும், அதன் பிறகு கலந்து வைத்த கலவையை தேசைகல் முழுவதும் தடவி விட வேண்டும். இப்படி செய்வதினால் தேசை அருமையாக வரும்.

டிப்ஸ்:2

வீட்டில் உபயோகிக்க கூடிய செம்பு மற்றும் அலுமினியம் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு ஒரு எலுமிச்சை தோலை கொண்டு அதில் சோடாப்பு சேர்த்து அந்த பாத்திரத்தை சுத்தம் செய்யும் பொழுது பளபளபாக மாறிவிடும்

டிப்ஸ்:3

நம் வீட்டில் உபயோகிக்க கூடிய பிரிட்ஜ்  அதை திறக்கும் பொழுது ஒரே வாடையாக இருக்கும், அந்த வாடைகளை சரி செய்வதற்கு ஒரு சின்ன  கிண்ணத்தில் எலுமிச்சை தோலை அதில் வைத்து, எலுமிச்சை தோல் மீது சோடா உப்பு சேர்த்து அதை பிரிட்ஜ் உள்ளே வைப்பதால் எந்த ஒரு வாடையும் இல்லாமல் இருக்கும்.

டிப்ஸ்:4

ஒரு சிலர்க்கு சாப்பிட்டதும் செரிமானம் ஆகாமல் நெஞ்சி எரிச்சல்கள் ஏற்படும் அப்பொழுது ஒரு பாதி எலுமிச்சை தோலை கொண்டு நான்கு துண்டுகளாக நறுக்கி, அதில் ஒரு துண்டை உப்புயில் வைத்து அதை சாப்பிட்டு வருவதால் உடலுக்கு எந்த பிரச்சனையும் வராது.

டிப்ஸ்:5

அடுத்ததாக ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் 5 எலுமிச்சை தோலை சேர்த்து தண்ணீரில் கொத்திக்க வைத்து,  அதை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்து சோடா உப்பு சேர்த்து கலக்கி விடவும், அந்த கலந்த கலவையில் பல்துவாக்கும் பிரஷை அந்த தண்ணீரில் வைப்பதால் அதில் உள்ள கிருமிகள் எல்லாம் அழிந்துவிடும்.

டிப்ஸ்:6

அடுத்ததாக மீதம் இருக்கும் எலுமிச்சை தண்ணீரில் சோடா உப்பு சேர்த்து அதை ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை தண்ணீரை கலந்து வீட்டில்  கறை படிந்திருக்கும் சுவறுகள் மற்றும் சமையல் அறையில் படிந்திருக்கும் கறைகளை போக்குவதற்கு இந்த டிப்ஸ் அருமையாக இருக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement