இனி எலுமிச்சை தோலை தூக்கி எறியாதீங்க.. பாத்ரூம் முதல் வீடு கிளீன் செய்வதற்கு பயன்படுத்தலாம்..!

இனி எலுமிச்சை தோலை தூக்கி எறியாதீங்க.. பாத்ரூம் முதல் வீடு கிளீன் செய்வதற்கு பயன்படுத்தலாம்..! Lemon Peel Uses in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.. பொதுவாக நாம எலுமிச்சை பழத்தில் சாறை மட்டும் பிழிந்துவிட்டு அதனுடைய தோல் பகுதியை தூக்கி எறிந்துவிடுவோம். இந்த எலுமிச்சை தோல் நமது வீட்டை கிளீன் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக நாம் இன்று எலுமிச்சை தோலை பயன்படுத்தி லிக்விட் தயார் செய்ய போகிறோம். இந்த லிக்விடை நாம் பாத்ரூம் கிளீன் செய்வது முதல் வீட்டு கிளீன் செய்வது வரை பலவகையில் பயன்படுத்தலாம் சரி வாங்க இந்த லிக்விட் எப்படி தயார் செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் தேவைப்படும், இந்த லிக்விடை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சை தோல் – 4
  2. பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
  3. வாஷிங் பவுடர் – இரண்டு ஸ்பூன்
  4. சால்ட் உப்பு – ½ ஸ்பூன்
  5. தண்ணீர் – 2 கப்
  6. 75% Alcohol – ஒரு ஸ்பூன்
  7. பிளாஸ்டிக் பாட்டில் – ஒன்று

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீடு துடைக்கும் போது இதை கலந்து துடையுங்கள் போதும்..! வீடு எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருக்கும்..!

செய்முறை – Lemon Peel Uses in Tamil:lemon peel

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நான்கு எலுமிச்சை பழத்தின் தோலை சேர்க்கவும் பின் அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த எலுமிச்சை தோலை ஒரு பவுலை வடிகட்டிக்கொள்ளவும்.

பிறகு பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன், வாஷிங் பவுடர் இரண்டு ஸ்பூன், சால்ட் உப்பு ½ ஸ்பூன், 75% Alcohol  ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அவ்வளவு தான் லிக்விட் தயார் இந்த லிக்விடை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி தேவைப்படும் போதேல்லாம் கிளீன் செய்ய பயன்படுத்தலாம்.

இந்த லிக்விடை பயன்படுத்தி நீங்கள் டாய்லட்டை சுத்தம் செய்யலாம், பாத்ரூமை சுத்தம் செய்யலாம், வாஸ்பேஷனை சுத்தம் செய்யலாம், வீடு துடைப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த லிக்விடை பயன்படுத்து சுத்தம் செய்யும் பொழுது அந்த இடத்தில் உள்ள அனைத்து கறைகளை அகன்று பளிச்சென்று காணப்படும்,

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil