Lips Black to Pink Home Remedies
நிறைய நபர்களுக்கு உதடு கருமையாக இருக்கிறது என்று கவலைப்படுவார்கள். இதற்காக நிறைய கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது உதடு நிறம் மாறினாலும் நாளடைவில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் உதட்டின் நிறத்தை சிவப்பாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் படித்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
பாதாம் எண்ணெய்:
உதடுகளில் பாதாம் எண்ணெயை மசாஜ் செய்யவும். இப்படி செய்வதனால் உதடு ஈரப்பதமாக்குகிறது, இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும். மேலும் உதட்டின் நிறத்தையும் அதிகப்படுத்தும். பாதாம் எண்ணெய் இல்லையென்றால் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
மாதுளை சாறு:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மாதுளை சாறு, 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உதட்டில் தடவி 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தேன் மற்றும் சர்க்கரை:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் இந்த பேக்கை அப்பளை செய்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பன்னீர்:
ஒரு கிண்ணத்தில் பன்னீர் 1 தேக்கரண்டி, ரோஸ் வாட்டர் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தடவ வேண்டும். இல்லையென்றால் இரவு தூங்குவதற்கு முன்பு தடவி கொள்ளலாம்.
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு உதட்டில் தடவி மசாஜ் செய்யவும்.
வெள்ளரி சாறு:
வெள்ளரிக்காயை கட் செய்து அதனை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்கவும். குளிர்ந்ததும் காட்டன் துணியை பயன்படுத்தி தொட்டு உதட்டில் மசாஜ் செய்யவும். உதட்டில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீருள் கழுவ வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து வந்தாலே உதடு கருமை நிறம் மாறி சிவப்பு நிறமாக காட்சியளிக்கும்.
3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |