இந்த மாதிரி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்

loan to avoid in tamil

வாங்க கூடாத கடன்கள்

இன்றைய காலத்தில் கடன் வாங்காதவர்கள் என்று யாருமில்லை. பல கடன்கள் வாங்குகிறோம். bank, குழு, நகை கடன் என்று பல விதங்களில் கடன் வாங்குகிறோம். இந்த மாதிரி கடன் வாங்கும் போது வட்டி குறைவாக உள்ள இடத்தில் தான் கடன் வாங்குவோம். எந்த மாதிரியான இடத்தில் கடன்களை வாங்க கூடாது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ கடன் பத்திரம் எழுதுவது எப்படி?

நகை அடகு கடை:

பெரும்பாலான மக்கள் செய்ய கூடியது. உங்களிடம் இருக்கும் நகையை அடகு வைத்து பணம் பெறுவது. இதை நீங்கள் சரியாக வட்டியை கட்டினால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதுபோல் நகையின் காலம் முடிவடைதற்குள் நகையை திருப்பி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே நீங்கள் சரியாக கட்டவில்லை என்றால் உங்களது நகை ஏலத்தில் விடுவார்கள். விலை உயர்ந்த பொருள் குறைவான கடனால் நம் கையை விட்டு போகிவிடும்.

கிரெடிட் கார்டு அட்வான்ஸ்:

பண முன்பணம் என்பது உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து எடுக்கக்கூடிய குறுகிய கால கடனாகும். இந்த கடனை வாங்கும் போது வட்டியை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் இதில் வட்டி அதிகமாக இருக்கும். நீங்கள் வட்டியை சரியாக கட்டவில்லை என்றால் அதற்கான அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும்.

பேடே லோன்:

மாதம் சம்பளம் பெறுபவர்களுக்கு மாத கடைசி ஆனால் கஷ்டமாக இருக்கும். அதற்காக இந்த லோன் வாங்குவதை தவிர்க்கவும். இதில் கடன் வாங்கினால் நேரம் மற்றும் நாள் கணக்கில் வட்டி இருக்கும். இந்த கடனுக்கு வட்டி அதிகமாக இருக்கும். அதனால் இதை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

Cashe Loan App in Tamil:

இந்தியாவில் இந்த கடனை அதிகளவு வாங்கமாட்டார்கள். இதில் வட்டி அதிமாக இருக்கும் என்பதை விட கடன் வாங்குபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்கமாட்டார்கள். அதனால் இதுபோன்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

Car Title Loan in Tamil:

நகையை அடகு வைப்பது போல காரை அடகு வைத்து கடன் பெறுவதாகும். இதற்கு வட்டி அதிகமாக வசூலிக்கப்படும். சொன்ன நாட்களில் பணத்தை கொடுக்காவிட்டால் வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல். காரை பறிமுதல் செய்து விற்பனை செய்துவிடுவார்கள். அதனால் இது போன்ற கடனை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil