ஒரு வாரத்திற்கு மாவு புளிக்காமல் இருக்க பிரிட்ஜ் தேவையில்லை.! இதை மட்டும் செய்யுங்க

Advertisement

மாவு புளிக்காமல் இருக்க 

இட்டலி தோசை இல்லாத வீடுகளே இல்லை. காலை மற்றும் இரவு நேர உணவாக இருப்பது இட்லி தோசை தான். இந்த இட்டலி தோசை மாவுகளை தினமும் அரைக்க முடியாது. காரணம் பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் ஒரு வாரத்திற்கு தேவையான மாவை அரைத்து வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிலும் அரைத்து வைத்த மாவை புளிக்காமல் இருக்க பிரிட்ஜில் வைப்பார்கள். அதுவே பிரிட்ஜ் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் பிரிட்ஜில் வைக்காமலே மாவை ஒரு வாரத்திற்கும் புளிக்காமல் வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மாவு புளிக்காமல் இருக்க டிப்ஸ்:

டிப்ஸ்: 1

முதலில் நீங்கள் கிரைண்டரில் மாவு அரைக்கும் போது கிரைண்டரை கழுவி கொள்ள வேண்டும். பலரும் கழுவி வைத்தது என்று கழுவாமலே மாவை அரைக்க ஆரம்பிக்கிறார்கள்.

டிப்ஸ்: 2

அரிசியை சரியான நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும், அதாவது 3 அல்லது 4 மணி நேரத்திற்கு தான் ஊற வைக்க வேண்டும். ரொம்ப நேரம் ஊற வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். உளுந்தை 1 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும்.

பல வருடமாக உங்க பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ளதா.! அதை நீக்க இதை மட்டும் செய்யுங்க

டிப்ஸ்: 3

உளுந்தை அரைக்கும் போது நீண்ட நேரத்திற்கு ஓட விட கூடாது, அதாவது 25 அல்லது 30 நிமிடத்திற்கு அரைக்க வேண்டும். அதே போல் அரிசியையும் ரொம்ப நேரத்திற்கு அரைக்க கூடாது.

டிப்ஸ்: 4

மாவு புளிக்காமல் இருக்க 

அடுத்து மாவுஅரைத்த பிறகு அதனை கரைக்கும் போது கையை போட்டு கரைக்க கூடாது. கரண்டியை பயன்படுத்தி தான் கரைக்க வேண்டும். ஏனென்றால் நமது கையை போட்டு கரைக்கும் போது நமது உடல் சூட்டினால் சீக்கிரம் மாவு புளித்து விடும்.

முக்கியமாக மாவில் உப்பு போட்டு கரைக்க கூடாது. ,மாவை பயன்படுத்தும் போது உப்பு சேர்த்து கலந்து விட்டு ஊற்ற ஆரம்பிக்கலாம்.

டிப்ஸ்: 5

அரைத்த மாவை சில்வர் பாத்திரத்தில் வைக்காமல் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும். அடுத்து கீழ் பகுதியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேலே அரைத்து வைத்த மாவை வைக்க வேண்டும்.

மேல் கூறியுள்ளது போல வைத்தால் ஒரு வாரத்திற்கு மேல் மாவு புளிக்காமல் இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

 

Advertisement