வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரிசி, கோதுமை போன்ற மாவு பொருட்களில் வண்டுகள் வராமல் இருக்க இப்படியொரு டிப்ஸா..!

Updated On: October 11, 2023 12:29 PM
Follow Us:
maavu storage tips in tamil
---Advertisement---
Advertisement

மாவு பொருட்களில் வண்டு வராமல் தடுக்க டிப்ஸ்

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்துமே இருக்கும். சிலர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை வாங்கி பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் மாதம் ஒரு முறை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவது தப்பில்லை. ஆனால், நாம் வீட்டிற்கு தேவையான பொருட்களை மாதத்திற்கு ஒரு முறை வாங்கி பயன்படுத்தும் போது, அதில் பூச்சிகள் வண்டுகள் நுழைந்து பொருட்களே கெட்டுபோய்விடும். இதுபோல உங்கள் வீடுகளிலும் நடந்துள்ளதா..? ஆம் என்றால் கவலையை விடுங்கள். இன்று நம் பதிவில் மாவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மாவு பொருட்களில் வண்டு வராமல் தடுக்க சூப்பரான டிப்ஸ்:

maavu porutkal kedamal irukka

பெரும்பாலும் நாம் அனைவருமே மாத சம்பளம் வாங்கியதும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி ஸ்டோர் செய்து வைத்திருப்போம். அதில் நாம் அதிகமாக வாங்கி ஸ்டோர் செய்து வைத்திருக்கும் பொருட்கள் என்றால் அது மாவு பொருட்கள் தான். அதாவது அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்ற பொருட்களை சொல்கின்றேன்.

இதுபோல நாம் மாவு பொருட்களை ஸ்டோர் செய்து வைத்திருக்கும் போது, அதில் வண்டுகள் பூச்சிகள் என்று வந்துவிடும். அதை தடுக்க என்ன தான் செய்வது என்று பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்கு ஒரு தீர்வு தரும் டிப்ஸை இப்போது காணலாம்.

இஞ்சி மாத கணக்கில் காய்ந்து போகாமல் இருக்க மண் அல்லது டிஸ்சு பேப்பர் போதும்..

டிப்ஸ் -1 

maavu porutkal kedamal irukka

முதலில் நாம் அரிசி, கோதுமை போன்ற மாவு பொருட்களை பயன்படுத்தும் போது, ஈர கையுடனோ அல்லது ஈரமான பொருட்களை பயன்படுத்தி மாவை எடுக்க கூடாது. இப்படி செய்தால் மாவு கட்டிக்கட்டியாக மாறி அதில் பூச்சிகள் வண்டுகள் என்று வந்துவிடும். அதனால் இதுபோல செய்வதை தவிர்க்க வேண்டும்.

டிப்ஸ் -2

maavu porutkal kedamal irukka tips

அடுத்து ஒரு காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பை எடுத்து கொள்ளவும். பின் அதை ஒரு ரப்பர் பேண்டை போட்டு கட்டிக்கொள்ளுங்கள். பிறகு அதை அரிசி, கோதுமை, மைதா போன்ற மாவு பொருட்கள் வைத்திருக்கும் வாளியில் போட்டு விடுங்கள்.

ஒரு வருடமானாலும் தேங்காய் கெட்டு போகாமல் இருக்க சால்ட் மட்டும் போதுமா 

இப்படி செய்வதால் மாவு பொருட்களில் வண்டுகள் வரவே வராது. மாவும் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

டிப்ஸ் -3

maavu porutkal kedamal irukka tips

அதே போல சிறிதளவு பிரிஞ்சி இலையை எடுத்து, அதை அரிசி கோதுமை போன்ற மாவு பொருட்கள் வைக்கும் வாளியில் போட்டு வைத்தால், அதில் வண்டுகள் வரவே வராது. அதுமட்டுமில்லாமல், மாவு நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now