Make House Smell Good Home Remedies
பொதுவாக அனைவருமே வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைப்போம். இதற்காக வீட்டை அழகாகவும், தூய்மையாகவும் வைத்து கொள்வோம். ஆனாலும் சில நேரங்களில் வீட்டில் நாற்றம் வீசுகிறது. இவை நீங்கள் ஒரு வாரம் வீட்டை மாப் போடாமல் இருந்தாலும் நாற்றம் ஏற்படும். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடு சொல்லவே வேண்டாம் எதையாவது பண்ணி வைத்து விடுவார்கள், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்ய நேரமில்லாமல் கடையில் காசு கொடுத்து ஸ்ப்ரே வாங்கி பயன்படுகின்றனர். அதனால் தான் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வீட்டை எப்படி வாசமாக வைத்திருப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டை நறுமணமாக வைப்பதற்கு ஸ்ப்ரே:
எலுமிச்சை பழம்:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 3/4 அளவு வரைக்கும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, துளசி சாறு 2 தேக்கரண்டி சேர்த்து 1 மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். இதனை ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டியை பயன்படுத்தி சக்கை இல்லாமல் வடிகட்டி கொள்ளவும். இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எங்கு நாற்றம் வருகின்றதோ அங்கு ஸ்ப்ரே செய்து விடவும்.
மெழுகுவர்த்தி:

நறுமண வாசனையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் பயன்படுத்தி உங்கள் வீட்டை நறுமண வாசனைகளை தர கூடியதாக இருக்கிறது. இருப்பினும், இரசாயன கலவைகள் கொண்ட செயற்கை வாசனை திரவியங்களைத் தவிர்க்கவும். இயற்கையான மெழுகுவர்த்தியை பயன்படுத்தவும்.
24 மணி நேரமும் பாத்ரூம் வாசனையாக இருக்க இதை மட்டும் செய்யுங்க..
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்:
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. வீட்டில் தண்ணீர் தேங்காமலும், கிட்சனில் உள்ள சிங்கை சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
உணவுகளை திறந்து வைக்க கூடாது, அது போல வீணா போகிருந்த பழங்கள், காய்கறிகள் ஏதும் இருந்தால் அவற்றை தூக்கி எரிந்து விட வேண்டும்.
கிட்சன் மற்றும் பாத்ரூமை எப்பொழுதும் மூடி வைக்காமல் கொஞ்ச நேரம் திறந்து வைக்க வேண்டும்.
வீட்டில் செல்லப்பிராணிகள் ஏதும் வளர்த்தீர்கள் என்றால் அதனை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல்களை பகல் நேரத்தில் திறந்து வைத்து மாலை நேரத்தில் மூடி வைக்க வேண்டும்.
வீட்டில் ஈக்களின் தொல்லை நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்கள்
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |














