Masala Thattai Recipe
தீபாவளிக்கு எல்லாரது வீடுகளிலில் கண்டிப்பாக காரம் மற்றும் இனிப்பு என இந்த மாதிரியான ரெசிபிகள் தான் அதிகமாக செய்வார்கள். அதிலும் குறிப்பாக முறுக்கு மற்றும் தேங்காய்ப்பரை செய்யாத வீடுகளே கிடையாது. என்ன தான் வித விதமான இனிப்பு ரெசிபியை செய்தாலும் கூட காரமாக இருக்கும் ரெசிபியை சாப்பிடுபவர்களே அதிகமாக இருப்பார்கள். அப்படி பார்த்தால் முறுக்கு அடுத்த நிலையில் சீப்பு முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மசாலா தட்டை, சீடை, பக்கோடா என இவ்வாறு பல ரெசிபிகள் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தினையும் நம் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொன்றாக தான் செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று காரசாரமான மசாலா தட்டை செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
மசாலா தட்டை செய்வது எப்படி..?
பொருட்களின் அளவு |
செய்முறை விளக்கம் |
பொட்டுக்கடலை- 1 ஸ்பூன் |
முதலில் மிக்சி ஜாரில் 1 ஸ்பூன் பொட்டு கடலையை சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து வைத்து விடுங்கள். |
பூண்டு- 4 பற்கள் |
இப்போது இந்த 3 பொருளையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். |
மிளகு- 1 ஸ்பூன் |
சீரகம்- 1 ஸ்பூன் |
கடலை பருப்பு- 2 ஸ்பூன் |
அதன் பிறகு ஜாரில் உள்ள பொருளுடன் ஊற வைத்துள்ள கடலை பருப்பினையும் சேர்த்து கொர கொரவென அரைத்தால் போதும் மசால் தயார். |
அரிசி மாவு- 1 கப் |
இதற்கு பிறகு ஒரு பவுலில் இந்த 3 வகையான பொருளையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை பிசைந்து கொள்ள வேண்டும். பிசையும் போது 1 ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். |
அரைத்த மசாலா |
பொட்டு கடலை பவுடர் |
பெருங்காய தூள்- சிறிது |
மிளகாய் தூள்- 3/4 ஸ்பூன் |
5 நிமிடம் கழித்து மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் போதும் தட்டை செய்ய மாவு தயார். |
உப்பு- தேவையான அளவு |
கடாயில் எண்ணெய் |
2 நிமிடம் கழித்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெயை காய விடுங்கள். |
மசாலா தட்டை ரெடி |
கடைசியாக பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிதளவு எடுத்து தட்டை போல செய்து எண்ணையில் போட்டு பொறித்து எடுத்தால் போதும் மசாலா தட்டை ரெடி. |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |