கணக்கு செய்வது எப்படி..? | Maths Tips in Tamil
பொதுவாக, மாணவர்கள் பலபேர் பாடத்திலே பிடிக்காத பாடம் என்றால் அது கணக்கு தான் என்று தான் கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் சரியாக கணக்கை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். Maths பாடத்தை சரியாக புரிந்து கொண்டால் போதும் Maths பாடத்தை தவிர வேறு எதுவும் ஈசியான பாடமே கிடையாது. எனவே Maths பாடத்தை பார்த்து பயப்பிடாமல் எப்படி புரிந்து கொள்வது என்று பாருங்கள். அதற்கான பல டிப்ஸை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Maths பாடத்தை புரிந்துக்கொண்டு ஈசியாக போட சில வழிகள்:
அடிப்படை கணக்கு:
முதலில் கணக்கில் அடிப்படையாக உள்ளதை உங்களுக்கு புரியும் வரை போட்டு பாருங்கள். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் இதை நீங்கள் உங்களுக்கு புரியும் படி போட்டு விட்டீர்கள் என்றால் எல்லா கணக்கையும் ஈசியாக போட்டு விடுவீர்கள்.
உதாரணமாக, ஒரு அடிப்படை கணக்கில் What is X? என்று இருந்தால் முதலில் இதை புரிந்து சால்வ் பண்ணக் கற்றுக்கொள்ளுங்கள்.
Formula Book:
Formula மற்றும் தியரம் இவை இரண்டிற்கும் ஒரு நோட் போட்டு தினமும் வகுப்பில் நடக்கும் Formula மற்றும் தியரத்தை எழுதி தினமும் படியுங்கள். இதை நீங்கள் செய்தால் கணக்கில் எந்தெந்த இடத்தில் என்ன Formula யூஸ் பண்ண வேண்டும் என்று ஈசியாக தெரியும்.
Logic Method:
உங்களுக்கு புரியவில்லை என்றால் புரியும் வரை ஆசிரியரிடமோ அல்லது உங்களிடமோ கேள்வி கேட்க ஆரம்பித்தீர்கள் என்றால் விரைவில் புரிந்து கொள்ளலாம். இந்த ஸ்டேப் எப்படி வந்தது, ஏன் இதுமாறி போட வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளயே ஏன்..? எப்படி..? என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்தீர்கள் என்றால் ரொம்ப ஈசியாக Maths போடுவீர்கள்.
அமைதியான சூழ்நிலை:
அதிக சத்தம் இருக்கும் இடத்தில் இருந்து Maths கற்றுக்கொள்ளமால் அமைதியான இடத்திற்கு சென்று கற்றுக்கொண்டீர்கள் என்றால் வேகமாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
தெளிவான சிந்தனை:
மாணவர்களில் பலபேர் எல்லா Formula படித்து இருந்தாலும் அதை சரியான இடத்தில் அப்ளை செய்ய தெரியாமல் இருப்பார்கள். அந்த பார்முலாவிற்கு ஏற்ற கணக்கு வந்தாலும் அது அவர்களுக்கு தெரிவதில்லை. அதற்கு நீங்கள் முதலில் பிராக்டிகலாக யோசித்து போடவேண்டும்.
அதற்கு, உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்தி தெளிவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |