பத்து வருட பழைய உங்க மெத்தை சோபா புதுசு போல மாற்ற ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ..!

Advertisement

Mattress Cleaning Tips in Tamil

பொதுவாக பெருமபலன வீடுகள் மெத்தை, சோபா செட் இவைகள் எல்லாம் இருக்கும். இருப்பினும் பல வருடமாக பயன்படுத்திவரும் மெத்தை மற்றும் சோபா இவை இரண்டையும் பார்த்தால் கறைகள் படிந்திருக்கும், அல்லது அவற்றில் இருந்து லேசாக நாற்றம் அடிக்கலாம், அல்லது அழுக்கு படித்திருக்கலாம் அவற்றை அகற்றுவது என்பது மிகவும் முடியா காரியம் ஆகும். இருப்பினும் மிக எளிமையான முறையில் பழைய மெத்தை மற்றும் சோபாவை சுத்தம் செய்து புதியது போல் மாற்ற ஒரு அருமையான டிப்ஸ் இருக்கிறது, அதை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படித்து பெயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. தூள் உப்பு – ஒரு ஸ்பூன்
  2. துணிப்பவுடர் – ஒரு ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
  5. காட்டன் துணி – இரண்டு
  6. பவுல் – 1

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செய்யும் பொழுதே சுவைக்க தூண்டும் Chicken Ghee வறுவலை இப்படி ஒரு முறை செய்யுங்க..

செய்முறை:

ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள் பின் அதில் தூள் உப்பு ஒரு ஸ்பூன், துணி பவுடர் ஒரு ஸ்பூன், பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து நன்றாக பிளிந்துகொள்ளவும். பிறகு மெத்தை அல்லது சோபா எதுவாக இருந்தாலும் சரி அதன் மீது இந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைக்கவும்.

பிறகு இன்னொரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் கம்போர்ட் ஊற்றி கலந்து இன்னொரு காட்டன் துணியை நனைத்து மீண்டும் துடைக்கவும். அவ்வளவுதான் பிறகு அவற்றை இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காயவைக்கவும்.

இவ்வாறு செய்தால் உங்களுடைய பழைய மெத்தை மற்றும் சோபா புதியது போல் மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு பவுடர் போதும்.. 5 நிமிடத்தில் பித்தளை பாத்திரத்தில் படிந்துள்ள பல வருட கறையையும் போக்கிவிடலாம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement