மீன்முள் தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது
அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மீன் குழம்பு பிடிக்காதவர்கள் என்று யாரும் இருப்பார்களா. மீன், கடல் உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் இதனை பொறுமையாக சாப்பிட வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள முள் ஆனது தொண்டையில் சிக்கி கொள்ளும். எவ்வளவு தான் பொறுமையாக சாப்பிட்டாலும் மீன் முள் தொண்டையில் சிக்கி கொள்ளும். இதனை சரியான நேரத்தில் அகற்றப்படாவிட்டால், அது உணவுக் குழாயைக் கிழித்துவிடும். அதனால் இந்த பதிவில் ஈசியான முறையில் மீன் முள் தொண்டையில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
சாதம்:
நீங்கள் மீனை சாப்பிடும் போது மீன் முள் தொண்டையில் சிக்கி விட்டது போல் உணர்ந்தால் பதற்றம் அடையாமல் வெறும் வெள்ளை சாதத்தை மட்டும் விழுங்க வேண்டும். முக்கியமாக இருமவோ, காரி துப்பவோ கூடாது. இது போல நீங்கள் செய்வதால் மீன் முள் ஆனது தொண்டையில் கிழித்து விடும். நீங்கள் சாதத்தை சாப்பிடுவதால் முள் ஆனது உள்ளே சென்று விடும்.
உப்பு கலந்த தண்ணீர்:
ஒரு கிளாஸ் தண்ணீரில் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக மீன் முள் உள்ளே சென்று விடும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தை ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்திருக்க வேண்டும். இந்த வாழைப்பழத்தில் உள்ள உமிழ்நீரானது தொண்டையில் சென்று முள் ஆனது உள்ளே சென்றுவிடும்.
என்ன செய்ய கூடாது:
மீன் முள் தொண்டையில் சிக்கினால் வெறும் தண்ணீரை குடிக்க கூடாது.
அதிகமாக இரும கூடாது, ஏனென்றால் இருமுவதால் முள் ஆனது தொண்டையை கிழித்து விடும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தியும் மீன் முள் ஆனது உள்ளே செல்லாமல் இருப்பது போல் உங்களுக்கு தொண்டையை அறுத்து கொண்டே இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
அதுமட்டுமில்லமால் தொண்டையில் வலி அல்லது இரத்தம் போன்று ஏதும் வந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |