சிவக்காத மருதாணி இலையும் செக்க செவேன்னு சிவக்க வைக்கும்! இத மட்டும் செஞ்சிடுங்க போதும்.!

Mehendi for Dark Red Color

How to Make Henna Paste for Darkest Red Stain

Mehendi for Dark Red Color – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்னும் சில நாட்கள் மட்டும் தான் இருக்கிறது தீபாவளி பண்டிகை வருவதற்கு. புதிய ஆடைகள், புதிய ஜூவல்லர்ஸ் வாங்கிட்டீங்களா, அப்பறம் வீட்டுல பலகாரலாம் என்ன செய்யலாம்னு பிளான் பண்ணிட்டிங்களா? அப்பறம் கைக்கு மருதாணி போடலாமா இல்ல மெஹந்தி போடலாம்ணு டிசைட் பண்ணிடிங்களா. அப்படி டிசைட் பண்ணுனதுல உங்கள் ஜாய்ஸ் மருதாணியாக இருந்தால் இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தாங்க. ஆக நண்பர்களே சிவக்காத மருதாணி இலையையும் 100% செக்க செவேன்னு சிவக்க வைப்பதற்கு இங்கு ஒரு அருமையான டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • மருதாணி இலை – நான்கு கைப்பிடியளவு
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • கிராம்பு – 15
  • டீத்தூள் – 2½ டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை – 2½ டேபிள் ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதக்கணக்கில் காய்கள் வீணாக்காமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

மருதாணி அரைக்கும் முறை – Mehendi for Dark Red Color:

உங்கள் வீட்டில் அம்மிக்கல் இருக்கிறது அதில் அரைத்துக்கொள்ளலாம், இல்ல மிக்சி தான் இருக்கிறது என்றால் பெரிய மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதிலும் முதலில் மருதாணியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அதனுடன் ஒரு எலுமிச்சை அளவு புளி, இரண்டரை டேபிள் ஸ்பூன் சர்க்கரை, இரண்டரை டேபிள் ஸ்பூன் டீத்தூள் மற்றும் 15 முதல் 20 கிராம்புகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த மருதாணியை உங்கள் கையில் போட்டு பாருங்கள் கண்டிப்பாக உங்கள் நன்கு செக்க செவேன்னு சிவந்து இருக்கும்.

இந்த முறையில் ஒருமுறை உங்கள் வீட்டில் மருதாணி இலையை அரைத்து பாருங்கள் கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீண்ட நாட்கள் வரை தேங்காய் கேட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil