Milagu Seeragam Rice Ingredients in Tamil
பொதுவாக அதிகளவு கோவிலுக்கு இரண்டு விஷயத்திற்காக செல்வார்கள். ஒன்று பக்தி இன்னொன்று அங்கு கிடைக்கும் பிரசாதம். உங்களில் யாருக்கு அங்கு கொடுக்கும் பொடி சாதம் பிடிக்கும். அது என்ன சாதம் என்று கூட தெரியாது. அந்த அளவிற்கு அதனுடைய ருசி வேற லெவல இருக்கும்.
அதனை சாப்பிடும் போது அனைவருமே யோசிப்பார்கள். அதை எப்படி செய்து இருப்பார்கள் என்று. சிலர் மிளகு சாதம் என்பார்கள் சிலர் சீரக சாதம் என்பார்கள். உண்மையில் அது எப்படி செய்வார்கள் அல்லது அந்த பொடி செய்ய தேவையான பொருட்கள் தான் என்னென்ன..? சரி இனி மதியம் குழந்தைகளுக்கும் இந்த பொடி சாதத்தை 2 நிமிடத்தில் செய்து கொடுங்கள்.!
Milagu Seeragam Rice Ingredients in Tamil:
இதையும் செய்து பாருங்கள் 👉👉👉 செட்டிநாடு மசாலா செய்ய தேவையான பொருட்கள்..!
தேவையான பொருட்கள்:
- மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- வேர்க்கடலை – தேவையான அளவு
- கடுகு – 1 டீஸ்பூன்
- வெள்ளை உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- நெய்
- நல்லெண்ணெய்
முதலில் கடாயில் மிளகு சீரகம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து கருவேப்பிலை போட்டு அதில் வேர்க்கடலை சேர்த்து கலந்துவிட்டு, பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொள்ளவும். அடுத்து சாதத்தையும் சேர்த்து கலந்து கடைசியாக நெய் கலந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே தாளிப்பு பொருட்களை சேர்த்து தாளித்து சாப்பிடலாம்.
தெரிந்துகொள்ளுங்கள்👉👉👉 செட்டிநாடு மசாலா பொடி செய்முறை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |