Mirror Cleaning Tips in Tamil
வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் சுத்தமாக வைத்து கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை. முக்கியமாக பெண்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டை மட்டும் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள கூடாது. வீட்டில் உள்ள ஃபேன்ம் கண்ணாடி உள்ளிட்ட சிறிய சிறிய பொருட்களை கூட சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இப்பதிவில், நம் வீடுகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கண்ணாடியை நாம் சுத்தம் செய்யாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருவதன் மூலம், அதில் எண்ணெய் பிசுபிசுப்பு, கறைகள் மற்றும் அழுக்குகள் உள்ளிட்டவை உண்டாகும். ஆகவே, கண்ணாடியை இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்திட வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Clean Mirror Stains at Home in Tamil:
டிப்ஸ் -1
முதலில், ஒரு பாட்டிலில் 2 ஸ்பூன் அளவிற்கு வினிகர் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த ஸ்ப்ரேவை கண்ணாடியில் தெளித்து ஒரு துணைகொண்டு ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு துடைத்து விடுங்கள்.
டிப்ஸ் -2
கண்ணாடியில் உள்ள அழுக்கு மற்றும் பிசுபிசுப்பை போக்க விபூதி மற்றும் டால்கம் பவுடரை பயன்படுத்தலாம். அதாவது, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு டால்கம் பவுடர் அல்லது விபூதியை எடுத்து கொள்ளுங்கள். இதனை, ஒரு துணியில் தொட்டு கண்ணாடியை துடைத்து விடுங்கள். அதன் பிறகு இறுதியாக, ஒரு காட்டன் துணியை கொண்டு திட்டுத்திட்டாக இல்லாமல் நன்கு துடைத்து விடுங்கள்.
உங்களுடைய பழைய காலணிகளை இனிமேல் ஊறவைத்து கழுவ வேண்டிய அவசியமில்லை
டிப்ஸ் -3
கண்ணாடியில் உள்ள அழுக்கு மற்றும் பிசுபிசுப்பை போக்க டூத்பேஸ்ட்டை பயன்படுத்தலாம். அதாவது, நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்டை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கண்ணாடியின் எல்லா பகுதியிலும் அப்ளை செய்து, சிறிதளவு தண்ணீர் மற்றும் வினிகர் கொண்டு நன்கு துடைத்து விடுங்கள். இம்முறையை நீங்கள் செய்யும்போது, ஒன்றிற்கு இரண்டுமுறை நன்கு தேய்த்து விட வேண்டும்.
வெள்ளை துணிகளில் மஞ்சள் கறை நீங்க இனி கஷ்டப்பட வேண்டாம் இதை ட்ரை செய்தாலே போதும்
டிப்ஸ் -4
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை, கண்ணாடியில் தெளித்து ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு தேய்த்து திட்டுகள் இல்லாமல் துடைத்து விடுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |