மிக்ஸி நீண்ட காலம் வேலை செய்ய சூப்பர் டிப்ஸ்!

Advertisement

Mixer Problem Solve Tips in Tamil

வணக்கம்! நம் சமையல் வேலைகளை எளிதாக்க நாம் அதிகம் பயன்படுத்துவது மிக்ஸியினை தான்.  உங்கள் மிக்ஸி அடிக்கடி பழுதடைந்து விடுகிறதா? உங்கள் மிக்ஸி நீண்ட காலம் உழைக்க வேண்டுமா? அப்போ நீங்க சில மிக்ஸி பராமரிப்பு டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மிக்ஸி நீண்ட காலம் உங்களுக்கு உதவி செய்யும். உங்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவில் சில மிக்ஸி பராமரிப்பு டிப்ஸ்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

மிக்ஸி பராமரிப்பு டிப்ஸ்கள் :

 1. சூடான மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. ஆற வைத்த பின்னரே அரைக்க வேண்டும்.
 2. மிக்ஸியில் அதிகம் அரைக்கும் போது  மிக்ஸி சூடாகிறதா என்பதை அடிக்கடி கவனித்து அரைக்க வேண்டும். தொடர்ந்து அரைக்க கூடாது. சிறிது இடைவெளி விட்டு விட்டு அரைக்க வேண்டும்.
 3. மிக்ஸி ஜாரின் அடிப்பகுதி மிக்ஸியுடன் சரியாக பொருந்தி உள்ளதா என்பதை கவனித்த பின்னரே அரைக்க தொடங்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லை என்றால் மிக்ஸில் ஜார் விரைவில் பழுதடையும்.

   kitchen tips in tamil

 4. மிக்ஸி ஜாரில் இருக்கும் அரைக்கும் பிளேடு டைட்டாக உள்ளதா என்பதை அடிக்கடி கவனித்துக்கொள்ள வேண்டும். லூசாக இருந்தால் டைட் செய்த பின்னரே அரைக்க வேண்டும்.
 5. மிக்ஸி ஜாரில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே மிக்ஸியினை பழுதுபார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீரானது மிக்ஸி மோட்டாரில் இறங்கி மிக்ஸி விரைவில பழுதடையும்.
 6. மிக்ஸி ஜாரில் உள்ள அரைக்கும் பிளேடுகள் மழுங்கி இருந்தால் ஒரு கைப்பிடி உப்பினை போட்டு 1 நிமிடங்கள் அரைக்க  வேண்டும். இவ்வாறு செய்வதால் மழுங்கிய பிளேடுகள் கூர்மை பெறும்.

  மேலும் ஒரு பயனுள்ள தகவல்👉உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள அனைத்து கறைகளை போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

 7. பொருட்களை அரைக்கும் போது மிக்ஸி ஜாரில் 3– ல் 2 பங்கு அளவிற்கே  பொருட்களை போட்டு அரைக்க வேண்டும். ஜார் முழுதும் அதிக அளவு பொருட்களை போட்டு அரைத்தால் மிக்ஸி பழுதடையும்.
 8. அரிசி போன்ற பொருட்களை அரைக்கும் போது ஊற வைத்த பின்னரே அரைக்க வேண்டும்.
 9. Low Voltage நேரங்களில் மிக்ஸியினை பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினால் மோட்டார் பழுதடையும்.

   mixer problem solve tips in tamil

 10.  மிக்ஸியில் பொருட்களை அரைக்கும்போது மிக்ஸி ஜாரின் மூடியினை கையால் அழுத்தம் கொடுத்து அரைக்க வேண்டும்.
 11. மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடு தாராளமாக சுழலும் அளவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி பொருட்களைஅரைக்க வேண்டும். இல்லையென்றால் பிளேடு உடைய மற்றும் மோட்டார் எறிய வாய்ப்புள்ளது.
 12. மிக்ஸி ஜாரில் பொருட்களை அரைத்து முடித்தவுடன் அதனை அப்படியே வைக்காமல் சிறுது தண்ணீர் ஊற்றி அலம்பி வைக்க வேண்டும்.

மேற்கண்ட குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் கட்டாயம் உங்கள் மிக்ஸி நீண்ட காலம் உழைக்கும்.

மேலும் ஒரு பயனுள்ள தகவல்👉 உங்கள் விட்டு பாத்ரூம் சுவற்றில் உப்பு கறை படிந்துள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement