Mixer Grinder Cleaning
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். வீட்டை மட்டும் சுத்தமாக வைத்தால் வீடு அழகாக தெரியுமா.? வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க அப்போது தான் வீடு அழகாக தெரியும். மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிசின், குளிர்சாதன பெட்டி, டிவி போன்றவற்றை சுத்தமாக வைத்திருந்தால் தான் வீடு அழகாக தெரியும். அதனால் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் மிக்சி, கிரைண்டர் போன்றவை எவ்வளவு பழையதாக இருந்தாலும், புதியது போல மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மிக்சியை சுத்தம் செய்வது எப்படி.?
முதலில் மிக்சியை சுத்தம் செய்வதற்கு முன்னால் பிளக்கை டேப் வைத்து சுத்த வேண்டும். அதன் பிறகு மிக்சியில் சைடு பகுதியில் ஓட்டை இருக்கும் அல்லவா.! அதை சுத்தம் செய்வதற்கு காது சுத்தம் செய்ய பயன்படுத்தும் பட்ஸை எடுத்து அந்த ஓட்டையில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஓட்டையிலும் டேப்பை ஓட்ட வேண்டும்.
வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..
ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து கொள்ளவும், அதில் 2 மூடி வினிகரை ஊற்றி கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதனை பயன்படுத்தி மிக்சி முழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து துணி அல்லது பிரஷை பயன்படுத்தி துடைத்து விடவும். பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு காட்டன் துணியை பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து விடவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |