பணத்தை சேமிக்க இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும் நீங்கள் தான் ராஜா..!

money save tips in tamil

பணம் சேமிப்பது எப்படி.?

ஹாய் நண்பர்களே..! அனைவருக்கும் பணம் சேமிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். அப்படி பணம் சேமிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ ட்ரை செய்தாலும் முடியவில்லை என்று பலரும் நினைப்பார்கள். உங்கள் அனைவரின் ஆசையை நிறைவேற்றுவதற்கு இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். இன்றைய Tips பதிவில் பணம் சேமிக்க என்ன செய்வது என்பதை படித்து உங்களுடைய வீட்டில் நீங்களும் பணம் சேமித்து மகிழ்ச்சியாக இருக்கலாம் வாங்க நண்பர்களே..!

பணம் சம்பாதிக்க மந்திரம்

பணத்தை சேமிக்கும் முறைகள்:

money saving in tamil

டிப்ஸ்- 1

நீங்கள் தினமும் அல்லது மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி  அதில் வெறும் 500 ரூபாய் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற  பங்குசந்தையில் முதலீடு செய்தால் போதும் 20 வருடத்திற்கு பிறகு தோராயமாக 20 லட்சம் ரூபாய் உங்களுக்கு சேமிப்பு தொகையாக கிடைக்கும்.

டிப்ஸ்- 2 

அடுத்ததாக நீங்கள் அதிகளவு சம்பளம் வாங்குகிர்கள் அதற்கு ஏற்றவாறு முதலீடு செய்யும் தொகையினை பிரித்து வெவ்வேறு பங்குசந்தையில் முதலீடு செய்தால் சேமிப்பு தொகையானது குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு இருமடங்காக கிடைக்கும்.

டிப்ஸ்- 3

ஒரு மாதம் நீங்கள் சேமிக்க தொடங்கிவிட்டீர்கள் என்றால் அதனை நீங்கள் குறிப்பிட்ட வருடம் வரை தொடங்க வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு முதலீடு செய்வதற்கு சில நேரத்தில் பணம் குறைவாக இருப்பது போல் இருந்தால் அப்போது நீங்கள் தேவையற்ற செலவினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ்- 4

அதுபோல நீங்கள் சேமிக்க தொடங்குவதற்கு முன்பு கட்டாயமாக சில விஷயங்களை பற்றி நன்றாக யோசிக்க வேண்டும்.

  1. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
  2. முதலீடு செய்த பங்குசந்தையில் ஏற்றம், இறக்கம் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  3. உங்களுக்கு முதலீடு செய்த பணம் தீடீரென  தேவைப்பட்டால் அதனை 2 நாட்களுக்குள் எடுக்கும் வசதி உள்ள பங்குசந்தையாக இருக்க வேண்டும்.
  4. நீங்கள் முதலீடு செய்வதற்கு SIP (Systematic Investment Plan)முறையை சிறந்த முறையாகும்.

இதையும் படியுங்கள்⇒ பணத்தை சேமிப்பது நல்லதா..? முதலீடு செய்வது நல்லதா..?

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips