வெறும் 5 நிமிடத்தில் வீட்டில் தொல்லை செய்யும் மூட்டை பூச்சிகளை இப்படி ஒழிக்கலாம்..!

Moota Poochi Home Remedy in Tamil

பொதுவாக வீடு என்றால் மக்கள் நடமாட்டம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் ஒவ்வொருவர் வீட்டிலும் மக்கள் நடமாட்டத்தை விட பூச்சிகளின் தொல்லை தான் அதிகமாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பூச்சிகள் கிச்சன் வரை மட்டும் வந்து விட்டு சென்று விடும். ஆனால் பல்லி, மூட்டை பூச்சு, ஈக்கள் மற்றும் கொசுக்கள் என இத்தகைய பூச்சிகள் எல்லாம் வீட்டில் பல்வேறு பகுதிகளில் வந்து தொல்லை செய்யும். இத்தகைய பூச்சிகள் எங்கிருந்து, எப்படி வருகிறது என்ற சந்தேகமும் நிறைய நபர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் வீட்டினை நாம் சுத்தமாக வைத்து இருக்கும் போதே பூச்சிகளின் தொல்லை எவ்வாறு இருக்க முடியும் என்பது தான் பலருக்கும் பெரிய சந்தேகமாக உள்ளது. சரி இவற்றை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்றைய பதிவில் வீட்டில் தொல்லை செய்யும் மூட்டை பூச்சிகளை எவ்வாறு ஒழிப்பது என்பதற்கான டிப்ஸினை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மூட்டை பூச்சி கொல்லி மருந்து:

வேப்ப எண்ணெய்:

  • வேப்ப எண்ணெய்- 1 அவுன்ஸ்
  • சோப்பு தண்ணீர்- 1/2 ஸ்பூன்
  • தண்ணீர்- 4 அவுன்ஸ்

மூட்டை பூச்சி கொல்லி மருந்து  இயற்கையாகவே வேப்ப எண்ணெய் ஆனது கசப்பு மற்றும் தன்மை கொண்டது. ஆனால் இதில் அதிகமாக கிருமி நாசினியை கொண்டுள்ள ஒன்றாக இருக்கிறது. அதனால் இந்த எண்ணெயினை மூட்டை பூச்சியினை விரட்ட பயன்படுத்தலாம்.

ஆகையால் பெரு ஸ்ப்ரே பாட்டிலில் மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தினையும் எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள மூன்றினையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஒரு முறை குலுக்கி விட்டு மூட்டை பூச்சி வரு இடத்தில் ஸ்ப்ரே செய்தால் போதும் மூட்டை பூச்சி தொல்லை என்பது இருக்காது.

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும் 

பூச்சி விரட்ட ஆரஞ்சு ஆயில்:

  • கம்போஸ்ட் டீ- 1 கப்
  • ஆரஞ்சு ஆயில்- 1 அவுன்ஸ்
  • தண்ணீர்- 4 லிட்டர்
  • வெல்லப்பாகு- 1 அவுன்ஸ்

மூட்டை பூச்சி ஒழிப்பது எப்படி

முதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாலி அல்லது ஸ்ப்ரே பாட்டிலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக சேர்க்க வேண்டும்.

பின்பு இந்த கலவையினை மூட்டை பூச்சி வரும் இடத்தில் ஸ்ப்ரே செய்து பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். எனவே ஆரஞ்சு ஆயில் மற்றும் இதர பொருட்களின் கலவை என்பது உங்களுக்கு சிறந்த மூட்டை பூச்சி விரட்டியாக இருக்கும்.

வீட்டில் வண்டுகள் இல்லாமல் இருக்க 10 நிமிடம் வேலை இதை செய்தால் போதும்..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil