Moota Poochi Marunthu in Tamil
மூட்டை பூச்சு வீடுகளில் உள்ள பல பொருட்களில் ஒட்டிக்கொண்டு மனிதர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தும் ஒரு விதமான இரத்தம் உறிஞ்சும் பூச்சியாகும். இந்த மூட்டை பூச்சியை பகலில் அதிகமாக நம்மால் பார்க்க முடியாது. ஏனெற்றால் இது இரவு நேரங்களில் தான் எல்லா இடங்களிலும் அலையும். குறிப்பாக வீட்டின் மெத்தைகளில் அதிகமாக ஒட்டி இருக்க கூடியது. இந்த மூட்டை பூச்சு கடித்தால் உடலில் அழற்சி, அரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் மூட்டை பூச்சு தொல்லை இருந்தால் அதனை விரட்ட கிராம்பு ஒன்று போதும். ஓகே வாருங்கள் கிராம்பை வைத்து வீடுகளில் உள்ள மூட்டைப்பூச்சை எப்படி நிரந்தரமாக விரட்டி அடிப்பது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Bed Bugs Spray Home Remedy in Tamil:
வீட்டில் உள்ள மூட்டை பூச்சியினை விரட்ட நாம் கிராம்பை தான் பயன்படுத்த போகிறோம். ஏனெற்றால் கிராம்பில் அதிக அமிலத்தன்மை உடையது. எனவே இது மூட்டை பூச்சியினை விரட்ட மிகவும் உதவுகிறது.
இப்போது, ஒரு பாட்டிலை எடுத்து கொள்ளுங்கள். அதில் தண்ணீர் நிரப்பி அதில் கிராம்புகளை போட்டு நன்றாக குலுக்கி கொள்ளுங்கள்.
இந்த ஸ்ப்ரேவை உங்கள் வீடுகளில் மூட்டை பூச்சி உள்ள பகுதிகளில் தெளித்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம், வீட்டில் உள்ள மூட்டை பூச்சி தொல்லை குறையும்.
இதை மட்டும் செய்யுங்க போதும்.. வீட்டிற்குள் வண்டு வந்தால் தலைதெறிக்க ஓடிவிடும்..!
இதையும் பயன்படுத்தலாம்:
பேக்கிங் சோடா:
சமையலுக்கு நம் பயன்படுத்தும் பேக்கிங் சோடாவினை தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இந்த தண்ணீரை மூட்டை பூச்சி உள்ள இடங்களில் தெளித்து விடுங்கள்.
வசம்பு:
முதலில் வசம்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள். இதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இந்த வசம்பு தண்ணீரை மூட்டை பூச்சு இருக்கும் இடத்தில் தெளித்து விடுங்கள்.
எறும்பு தொல்லையை நீக்க எளிமையான கை வழிமுறைகள்….
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |