வீட்டில் பூச்சிகள் வராமல் இருக்க | Mop Tips and Tricks in Tamil
வணக்கம் நண்பர்களே.! வீட்டை என்ன தான் சுத்தமாக வைத்தாலும் சின்ன பூச்சிகள் வந்து கொண்டே இருக்கும். பூச்சிகள் வராமல் இருக்க கடையில் விற்கும் பொருட்களை பயன்படுத்துவீர்கள். இந்த பொருட்களில் கெமிக்கல் நிறைந்திருக்கும். அதனால் இதை பயன்படுத்தும் உடலின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமலும், வீட்டில் எந்த பூச்சிகளும் வராமல் இருக்கவும் மாப் போடும் போது இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும். அது என்ன பொருள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
Mop Tips and Tricks in Tamil:
முதலில் மாப் போடுவதற்கு முன் நன்றாக வீட்டை பெருக்க வேண்டும். வீட்டை பெருக்கும் போது சுவற்றில் உள்ள ஒட்டடைகளையும் அடித்துவிட்டு பெருக்கினால் வீடு சுத்தமாக இருக்கும்.
முதலில் மாப் போடுவதற்கு ஒரு வாளியில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் கல் உப்பு சிறிதளவு சேர்த்து கொள்ளுங்கள். கல் உப்பு வீட்டில் உள்ள பாக்ட்ரியாக்களை அளிக்கும் தன்மை கொண்டது.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க
பின் அதில் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து வசம்பை எடுத்து 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது வசம்பு ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த வசம்பு தண்ணீரை பயன்படுத்துவதால் வீட்டில் எந்த பூச்சிகளும் வராது. எப்படியென்றால் வசம்பில் உள்ள வாசனைக்கு எந்த பூச்சிகளும் வராது. மாப் போடும் தண்ணீரில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் பூச்சிகள் வராமலும், வீட்டின் தரையை பளிச்சென்று ஆக்குவதற்கு, நேர்மறை எண்ணங்களை தர கூடியதாகவும் இருக்கும்.மாப் போடும் முறை:
வாளியில் கலந்து வைத்திருக்கும் தண்ணீரில் மாப்பை நினைத்து தரையில் தேயுங்கள். முக்கியமாக நீங்கள் மாப் இடத்தில் மறுபடியும் காலை வைக்க கூடாது. மேலும் Fan போட கூடாது. மாப் போடும் போதே Fan போட்டு காய விட்டால் அந்த இடம் வெள்ளை வெள்ளையாக மாறிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ பெண்களே வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |