கொசு கடியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்..! Mosquito Bite Home Remedy in Tamil
Mosquito Bite Home Remedy in Tamil – இப்போல்லாம் பொழுதொணைக்கும் கொசுத்தொல்லை தாங்கமுடியமாட்டேன்குது.. கொசு கடிச்சிடிச்சின்னா கடிச்ச இடத்த்தில் தடிச்சி போய்விடும். அப்படி தடிச்ச இடத்தை சொரியும் போது மீண்டு அந்த இடம் வீங்கிவிடும். இந்த கொசு கடியால் ஏற்பட்ட வீக்கத்தை இயற்கையான முறையில் குறைக்க இங்கு சில டிப்ஸை பதிவு செய்துள்ளோம் அவற்றில் இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ஐஸ் கட்டி வைத்தியம்:
ஒரு துண்டு ஐஸ்கட்டியை எடுத்து ஒரு துணியில் மடித்து, கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் வீக்கம் குறைந்து போகும்.
லாவெண்டர் எண்ணெய்:
கொசு கடித்த இடத்தை குணமாக லாவெண்டர் எண்ணெய் உதவுகிறது. ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில், 2-3 குவளை வினிகரை ஊற்றினால், அந்த நீரை எந்த கடியையும் குணப்படுத்த உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் வினிகர் துளிகளை பஞ்சில் ஊற்றி, கடிப்பட்ட இடத்தில் தடவலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறட்டையை குறைக்க டிப்ஸ்..!
தேன்:
கொசு கடித்த வீக்கத்தை குறைக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை தேனின் மருத்துவ நலன்களில் அடங்கும். எனவே தேனை கொசுக்கடிக்கு பயன்படுத்துவதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை.
சமையல் சோடா:
சமையல் சோடாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, பின் 30 நிமிடங்கள் ஊற விட வேண்டும் அல்லது சமையல் சோடாவை சிறு அளவு தண்ணீரில் கலந்து கடிப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வீக்கம் குறையும்.
துளசி:
இயற்கையிலேயே வாசனைமிக்க இலைகளான இதனுள் கற்பூரம் மற்றும் தைமோல் அடங்கியுள்ளது. இந்த இரண்டும் அரிப்பைக் குறைக்க உதவும். இந்த இலைகளை மசித்து, கடிப்பட்ட இடத்தில் தடவலாம் அல்லது இதன் எண்ணெயை வாங்கியும் உபயோகிக்கலாம்.
கற்றாழை:
கற்றாழை வேனிற்கட்டியை குணப்படுத்த மட்டுமல்ல, கொசுக் கடியினால் ஏற்படும் அரிப்பு, வலி, வீக்கம் ஆகியவற்றை தணிக்கவும் உதவுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!
கற்பூரம்:
கற்பூரம் கொசுக்களின் பெரிய விரோதி. கற்பூரம் இருப்பதோ நாம் அன்றாடம் உபயோகிக்கும் கற்பூரத்தில் தான். எனவே கற்பூரத்தை அறையில் ஏறிய விட்டால், ஒரு கொசு கூட அறையில் தென்படாது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |