உங்கள் வீட்டில் கொசுவத்தி ஏற்றி வைப்பீர்களா..? அதன் விளைவுகள் பற்றி தெரியுமா..?

Advertisement

கொசுவர்த்தி சுருள் நல்லதா?

ஹலோ நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நம் வீட்டில் செய்யக்கூடிய தவறுகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அது உங்களுக்கு தவறான விஷயம் போல் தெரியாது. ஏனென்றால் அந்த ஒரு பொருள் இல்லையென்றால் மாலை முதல் இரவு வரை தூக்கவும் முடியாது. அது என்ன பொருள் என்று யோசிப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை கொசுவத்தி தான்.

இந்த கொசுவத்தியை வீட்டில் யார் ஏற்றிவைப்பீர்கள். இதை ஏற்றிவைப்பதால் கொசுக்கள் மட்டும் தான் இறக்கிறதா என்று தெரியுமா? அல்லது வேறு என்ன விளைவுகள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க அதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுவோம்..!

Mosquito Coil Side Effects in Tamil:

டெங்கு என்ற நோய் வரும் போது அதிக விற்பனையாகிறது கொசுவிரட்டி, கொசுவர்த்திசுருள், தாள்கள் தான். இதை வாங்கி பயன்படுத்தும் போது அது உங்களை கொசுக்களிலிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது உண்மை தான். ஆனால் அதனை நாம் அதிகம் சுவாசிப்பதால் நம் உடலில் எவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது தெரியுமா?

கொசுவர்த்தி பயன்படுத்தும் போது உங்கள் அறையில் ஏற்றிவைப்பீர்கள் அது சரி தான் அது கொசுக்களை மட்டும் கொள்ளாது உங்களை சேர்த்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

தினமும் கொசுவர்த்தி பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள்:

நுரையீரல் சம்பந்தமான நோய்கள்:

நுரையீரல் பிரச்சனை அறிகுறிகள்

கொசுவர்த்தியில் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. அதனை அதிகம் நேரம் சுவாசிப்பதால் நுரையீரலுக்கு அழுத்தத்தை கொடுத்து இறுதியில் புற்றுநோயின் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா: 

ஆஸ்துமா

உங்கள் வீட்டில் ஆஸ்தமா உள்ளவர்கள் அல்லது மூச்சு திணறல் இருந்தால் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் நீண்ட நேரம் அதை சுவாசிப்பதால் அவர்கள் நன்றாக இருந்தாலும் திடீரென்று மூச்சு திணறல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தோல் அலர்ஜி:

கொசுவர்த்தி பயன்படுத்தும் போது அதன் விளைவுகள் தெரியாது உங்கள் வீட்டில் அதிகளவு கொசுக்கள் இருக்காது. சிறிதளவு கொசுக்கள் இருக்கும்பட்சத்தில் கொசுவர்த்தி ஏற்றிவைப்பீர்கள். ஆனாலும் காலை எழுத்தும் கையில் காலில் தடித்து இருக்கும்.

இதற்கு காரணம் கொசுக்கள் என்று சொல்வோம். இன்னும் சிலருக்கு தோல் நன்றாகவே இருக்கும் அவர்களுக்கு தோளில் தேவையில்லாத அலர்ஜி ஏற்படும் அதற்கு காரணம் எதோ பூச்சி கடித்து உள்ளது என்று நினைப்போம் ஆனால் அதற்கும் காரணம் கொசுவர்த்தி தான்.

குழந்தைகளுக்கு பாதிப்பு:  

கொசு விரட்டியில் உட்புறத்தில் அதிகம் இராசயம் சேர்க்கப்பட்டாலும். மேல்புறம் காற்றுமாசுமாட்டின் காரணமாக சுவாசப்பிரச்சனை ஏற்படுத்தும்.  மேலும் கண்களை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதிக அளவுகளில், இரசாயனங்கள் கடுமையான நோய்கள், இருமல், மூச்சுத்திணறல், தொடர்ந்து தும்மல், ஆஸ்துமா, தொண்டை புண், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல், சுவாச எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே மூடி இருக்கும் அறையில் அல்லது வீட்டில் ஏற்றி வைக்காதீர்கள்.

அதேபோல் கொசுக்கள் பக்கத்தில் வாராது என்று நினைத்து பக்கத்தில் ஏற்றிவைத்து தூங்காதீர்கள்.

இதையும் படித்துவிடுங்கள் 👉👉 யார் வீட்டில் அந்துருண்டை பயன்படுத்துவீர்கள்..! இந்த பதிவை படித்துவிட்டு அது ஆபத்தா என்று தெரிந்துகொள்ளுங்கள்

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement