கொசு தொல்லை இனி இல்லை
இப்போ எல்லோர் வீடுகளிலும் இருக்கும் விருந்தாளி என்றால் அது கொசு தான். எந்த உயிரினங்கள் அழிந்தாலும் இந்த கொசு மட்டும் அழிவதே இல்லை என்று சொல்லி புலம்புவார்கள். நாமும் இந்த கொசுவை அழிக்க எவ்வளவோ செய்திருப்போம். ஆனால் அது முடியாத காரியமாக மாறிவிட்டது. ஆனால் கொசுவை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இந்த கொசுவால் பல நோய்கள் வரும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக நாம் கொசுவை விரட்ட அதிகமாக பயன்படுத்துவது கொசுவர்த்தியை தான். ஆனால் அந்த அது என்னவோ அந்த கொசுவர்த்திக்கு கொசு சாகவே சாகாது. அதனால் புது ஐடியாவாக கொசுவர்த்தியை வைத்தே கொசுவை விரட்டலாம். அதுவும் கொசுவர்த்தியை ஊறவைத்தால் போதும்..! அருமையான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கொசுவை விரட்ட கொசுவர்த்தியே போதும்..!
ஸ்டேப் -1
முதலில் கொசுவர்த்தியை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு கிண்ணத்தில் சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
ஸ்டேப் -2
அடுத்து அதில் 1 டம்ளர் அளவிற்கு வினிகர் சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கிராம்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.. இத்தனை நாள் தெரியாம போச்சே.. |
ஸ்டேப் -3
பின் ஒரு மணி நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
ஸ்டேப் -4
அவ்வளவு தான் கொசுவை அடியோடு விரட்டும் ஸ்ப்ரே ரெடி. இந்த ஸ்ப்ரேவை உங்கள் வீட்டில் மூலைகளிலும், ஜன்னல் இருக்கும் இடங்களிலும் மாலை நேரத்தில் ஸ்ப்ரே செய்தால் ஒரு கொசு கூட வராது.
சிம்பிள் டிப்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க. கொசு தொல்லை இனி இல்லை.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |