கொசு தொல்லை நீங்க
வெயில்காலம், மழைக்காலம், இலையுதிர்காலம் போன்ற எல்லா காலங்களிலும் கொசு தொல்லை தாங்க முடியாது. ஊசி போடுற வலியை கூட பொறுத்து கொள்ள முடியும். ஆனால் கொசு கடியை மட்டும் நம்மால் தாங்க முடியாது. கொசு கடித்த இடமானது தடித்தும், சிவந்த நிறத்திலும் காணப்படும். கொசு கடிப்பதால் நம் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசுவை நீக்குவதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இதனால் உடலில் புற்றுநோய் போன்ற பிரச்சனை ஏற்படும். அதனால் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் கொசுவை நீக்குவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கொசுக்கள் வராமல் இருப்பதற்கு செய்ய வேண்டியவை:
தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்:
வீட்டில் உள்பக்கமும் சரி, வெளிப்பக்கமும் சரி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீரின் மூலம் கொசுக்கள் அதிகமாக உருவாகும். அதனால் இந்த செயலினை தவிர்த்திடுங்கள்.
வீட்டில் செடிகள் வளர்க்க வேண்டும்:
வீட்டில் செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்கள் வராமல் தடுக்கலாம். அதாவது வாசனை உள்ள செடிகளை வளர்த்தால் கொசுக்களுக்கு அந்த வாசனை பிடிக்காது. அதனால் கொசுக்கள் வராமல் இருக்கும். துளசி செடி, புதினா செடி, ரோஸ்மேரி செடி போன்ற செடிகளில் எதாவது ஒன்றை வீட்டின் உள்பக்கம் வளர்க்க வேண்டும். ஒரு பானையில் வைத்து கூட செடிகளை வளர்க்கலாம்.
உங்க வீட்டு கிச்சன் பக்கமே கரப்பான் பூச்சி வரக்கூடாதுனா இதை செய்யுங்க போதும்..!
மாமிச தாவரங்களை வீட்டில் வளர்க்க வேண்டும், ஏனென்றால் மாமிச தாவரமானது கொசுக்களை கொள்ளும். அவற்றின் உணவிற்காக கொசுக்களை கொள்ளும். இதனால் நீங்கள் தாராளமாக மாமிச தாவரத்தை வாங்கி வீட்டில் வளர்க்கலாம்.
பூண்டு:
20 பற்கள் பூண்டை தோலுரித்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்த பூண்டையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 15 நிமிடம் கொதித்த பிறகு அடுப்பை ஆப் பண்ணவும். அதன் பிறகு பூண்டை நன்றாக மசித்து தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இதனை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பூண்டு வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது.
வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |