கொசு தொல்லை தாங்க முடியல
வீட்டில் எந்த பூச்சி அட்டகாசம் செய்தாலும் பொறுத்து கொள்ளலாம். ஆனால் இந்த கொசு தொல்லையை மட்டும் தாங்கவே முடியாது. ஊசி போடும் வலியை விட கொசு கடிப்பதன் வலி அதிகமாக இருக்கும். வீட்டில் கொசு இருந்தால் தூங்கவே முடியாது. இவை கடித்தால் தோலானது சிவந்த நிறமாக இருக்கும். தோலில் வீக்கம் காணப்படும். மேலும் மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் லீகுய்டுகள் மற்றும் கொசு பத்திகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலில் நோய்கள் வர கூடும். அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை அழிப்பது எப்படி என்று தெறித்து கொள்வோம்ம வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டில் கொசு வராமல் இருக்க:
முதலில் வீட்டில் பாத்ரூம் மற்றும் பின்புறம், சிங்க் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கொசு எப்போது அதிகமாக இருக்கும் என்றால் மாலை நேரத்தில் தான் அதிகமாக இருக்கும். அதனால் மாலை நேரங்களில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும்.
அதன் பிறகு வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் பொருட்கள் அடைத்து வைத்திருக்கும் ரூமாக இருந்தாலும் சரி, கிட்சனாக இருந்தாலும் சரி சுத்தம் இல்லாத இடத்தில் தான் கொசுக்கள் அதிகமாக வரும்.
செடிகளை வளர்க்க வேண்டும்:
சில செடிகளின் வாசத்திற்கு கொசுக்கள் வீட்டிற்குள் வராதாம். அதனால் நீங்கள் இந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம் இல்லையென்றால் எங்கு கொசு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் செடிகளை வைத்து விடலாம். அவை என்னென்ன செடிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
சாமந்தி செடி, துளசி செடி, எலுமிச்சை செடி, சிட்ரோனெல்லா செடி, புதினா செடி போன்றவற்றில் எதையாவது ஒன்றை வளர்க்கலாம். உங்களால் வளர்க்க முடியவில்லை என்றால் அந்த செடியின் ஒரு கிளையை மட்டும் கொசுக்கள் அதிகமாக வரும் இடத்தில் வைத்தாலே போதும். இந்த செடியின் வாசத்திற்கு கொசுக்கள் மட்டுமில்லை எந்த பூச்சிகளும் வராது.
பூண்டு:
பூண்டுகளின் தோலை நீக்கி விட்டு 6 பற்களை எடுத்து கொள்ளவும். இதனை நச்சு எடுத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதில் நச்ச பூண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். இவை ஆரிய பிறகு பாட்டிலில் ஊற்றி கொசுக்கள் ஏகு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ப்ரே செய்து விடவும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |