இலவசமாக கிடைக்கும் பொருளை கொண்டு கண்ணாடி போல முகத்தை மாற்றலாம் வாங்க..

Advertisement

கண்ணாடி போல முகம் மாற டிப்ஸ் 

நண்பர்களே வணக்கம் இன்றைய அழகு குறிப்பு பதிவில் கண்ணாடி போல முகம் மாறுவதற்கு சூப்பரான டிப்ஸை பார்க்கப்போகிறோம். பொதுவாக முகம் மாறுவதற்கு நிறைய வகையான டிப்ஸ்களை செய்து முகத்தில் பயன்படுத்தி வருகிறோம். அதனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும். நமே காசு கொடுத்து பின் விளைவுகளை சந்தித்து வருகிறோம். இனி அதை பற்றி கவலை வேண்டாம் காசு தேவையில்லை சூப்பராக முகம் கண்ணாடி போல மின்னும் வாங்க எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள்:

நம்மை அழகாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் முதலில் நாம் சாப்பிட்டும் உணவுகளில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் காரணம் உடலில் ஏற்படும் மாற்றம் தான் முகத்தை கெடுக்கும்.  அதனால் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

வீட்டில் காய்கறிகள் வாங்குவது வழக்கம் அப்போது நமக்கு கருவேப்பிலை கொத்தமல்லி இலவசமாக தருவது வழக்கம். அதில் இருக்கும் ஒரு பொருள் போதும் முகம் வெண்மையாக.

ஸ்டேப்: 1

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் நறுக்கிய தக்காளி பழம் – 2, கழுவியை கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த பின் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வடிகட்டிய வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சாறை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

வடிகட்டி வைத்த சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து அப்படி குடிக்கலாம் உங்களுக்கு இனிப்பு சுவை வேண்டுமென்றால் அதில் தேன், வெல்லம், நாட்டு சர்க்கரை இதில் ஏதாவது ஒன்றை மட்டும் சேர்த்து குடிக்கலாம் இது முகத்தை பிரகாசமாக மாற்றும். உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும்.

ஸ்டேப்: 3

இந்த ஜூஸை காலை உணவை சாப்பிட்டுவிட்டு அதன் பின் 1/2 மணி நேரம் கழித்து குடிக்கலாம். அல்லது மாலை நேரங்களில் இது போன்ற டீ காபி குடிப்பதற்கு பதிலாக இதை குடிக்கலாம். இந்த மூன்று பொருட்களிலும் முகத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கி உள்ளது ஆகவே இதை நாம் தினமும் சாப்பிட்டால் என்னேற்ற நன்மைகள் கிடைக்கிறது.

கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

15 நிமிடங்களில் பொலிவான சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement