முகத்தில் இருக்கும் தழும்புகள் 3 நாட்களில் மறைய இந்த இப்படி செய்யுங்கள்..!

Advertisement

Mugaththil Thalumbu Maraiya 

அனைத்து பெண்களுமே அழகிய முகம் வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை வரக்கூடாது என்ற நோக்கத்தில் கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி பயன்படுத்துவதால் முகத்தில் மேலும் பிரச்சனைகள் வருகின்றன. இப்படி கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உங்கள் முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்க முடியும். அதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க..!

உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

முகத்தில் இருக்கும் தழும்புகள் மறைய டிப்ஸ்: 

Mugaththil Thalumbu Maraiya 

டிப்ஸ் -1

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சந்தனத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதனுடன் பன்னீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.

பின் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இதுபோல தினமும் செய்து வருவதால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். முகம் பொலிவுடன் இருக்கும்.

டிப்ஸ் -2 

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின் நீரை வடிகட்டி வெந்தயத்தை அரைத்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் கரும்புள்ளி மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

10 நிமிடம் கழித்து வெந்தயம் கொதிக்க வைத்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

இதையும் படியுங்கள் => உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

டிப்ஸ் -3

சுத்தமான தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையால் முகத்தில் இருக்கும் தழும்பு மற்றும் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். மேலும் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.

டிப்ஸ் -4

ஒரு உருளைக்கிழங்கை துருவி மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்து  கொள்ளுங்கள்.

பின் அதை முகத்தில் தழும்பு மற்றும் கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவ வேண்டும். உருளைக்கிழங்கில் இருக்கும் சாறு இறங்கியதும் முகத்தை கழுவ வேண்டும்.

இதுபோல வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வாருங்கள். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். முகம் பளபளப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள் => உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement