Munthiri Kothu Seivathu Eppadi
வருடா வருடம் தீபாவளிக்கு உளுந்து வடை, மசால் வடை, சுழியன், பஜ்ஜி மற்றும் போண்டா என இதுபோன்ற ரெசிபியை தான் அனைவருடைய வீட்டிலும் செய்வார்கள். இவற்றை எல்லாம் செய்வது ஒரு நடைமுறையாக இருந்தாலும் கூட சாப்பிடுபவர்களுக்கு சற்று அழுத்து போகக்கூடிய ஒன்றாக தான் இருக்கும். ஏனென்றால் எத்தனை வருடம் தான் ஒரே ரெசிபியை சாப்பிடுவது என்று கூறுவார்கள். அதனால் இந்த தீபாவளிக்கு டேஸ்டில் சுழியனயே மிஞ்சும் அளவிற்கு சுவையான மற்றும் ஈஸியான முந்திரி கொத்து செய்வது எப்படி என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முந்திரி கொத்து செய்முறை:
பொருட்களின் அளவு |
செய்முறை விளக்கம் |
பச்சை பயிறு- 1 கப் |
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 கப் பச்சை பயிறை நன்றாக பொன் நிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள். |
மாவு அரைத்தல் |
இப்போது ஒரு மிக்சி ஜாரில் வறுத்த பச்சை பயிறு மற்றும் ஏலக்காய் 3 சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து விடுங்கள். |
துருவிய தேங்காய்- 1/2 கப் |
அடுத்த அடுப்பில் மற்றொரு கடாயினை வைத்து அதில் 1/2 கப் சேர்த்து வறுத்துக்கொண்டு பின்பு அதனுடன் 1 ஸ்பூன் எள்ளையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வறுக்க வேண்டும். |
எள்- 1 ஸ்பூன் |
பவுலில் பொருளை சேர்த்தல் |
5 நிமிடம் கழித்து ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ள பயிறு பவுடர், வறுத்த தேங்காய் மற்றும் எள்ளை பவுலில் சேர்த்து கலந்து விடுங்கள். |
வெல்லம்- 3/4 கப் |
இதனை தொடர்ந்து நீங்கள் 3/4 கப் வெல்லத்தில் வெல்ல பாகு செய்து அதனை பவுலில் உள்ள மாவுடன் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து வைத்து விடுங்கள். |
அரிசி மாவு- 1/2 கப் |
கடைசியாக ஒரு பவுலில் அரிசி மாவு மற்றும் மைதா மாவினை சேர்த்து சரியான அளவில் தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள். |
மைதா மாவு- 1 ஸ்பூன் |
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் |
முந்திரி கொத்து பொறித்தல் |
பின்பு நீங்கள் அடுப்பில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பிடித்து வைத்துள்ள 3 உருண்டையினை மாவில் தொட்டு அதனை எண்ணையில் போட்டு பொறித்து எடுத்து விடுங்கள். |
முந்திரி கொத்து தயார் |
அவ்வளவு தான் முந்திரி கொத்து தயார். இதேபோல் மற்ற உருண்டையினையும் போட்டு எடுத்து விடுங்கள். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |