என்றென்றும் தித்திக்கும் செட்டிநாடு காளான் மசாலா

Advertisement

காளான் மசாலா

நாம் தினமும் ஒரே மாதிரியான உணவுகளை உட்கொண்டால் நமக்கு சாப்பிடும் ஆர்வம் வராது. நாம் தினமும் பயன்படுத்தும் காய்வகைகளாக இருந்தாலும் தினம் ஒரு வகையில் சமைத்தால் தான் நமக்கு சாப்பிட தோன்றும். அப்படி இருக்கும் போது நாம் என்றோ ஒரு நாள் சமைக்கும் காளான்களை எப்போதும் ஒரே விதமாக சமைத்தால் எப்படி ? காளான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றை அவியலாக செய்தால் கண்டிப்பாக யாரும் சாப்பிட மாட்டர்கள். இப்படி இருக்கும்பட்சத்தில் காளானை அனைவரும் விரும்பும் செட்டிநாடு சுவையில் செய்தல் எப்படி இருக்கும். வாருங்கள் இன்று காளானை செட்டிநாடு சுவையில் காளான் மிளகு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செட்டிநாடு காளான் மிளகு மசாலா செய்முறை விளக்கம்: 

mushroom papeer fry

தேவையான பொருட்கள்:

மிளகு – 3 டீஸ்பூன்
காளான்  – 500 கிராம்
பெருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
வெங்காயம் – 500 கிராம்
குடைமிளகாய் – 3
இஞ்சி
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை

Mushroom Pepper Fry:

செட்டிநாடு காளான் மிளகு மசாலா செய்முறை:

ஒரு கடாயில், நெய் சேர்த்து, நெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தலித்துக்கொள்ளவும்

பின்னர் அதனுடன் அரைத்துவைத்துள்ள இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து, இஞ்சியின் பச்சை தன்மை போகும்வரை வதக்கவும்.

அடுத்ததாக சுத்தம் செய்து வைத்துள்ள காளான்களை சேர்த்துக்கொள்ளவும். காளான்களை நன்கு வதக்கவும். காளான்களில் உள்ள ஈரப்பதம் குறையும் வரை நன்றாக வதக்க வேண்டும். காளான்கள் நன்றாக வெந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து கிளறவும்.

கடைசியாக மிளகு, பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவற்றை அரைத்து அதனை காளானுடன் சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா நன்றாக காளான்களில் நன்றாக ஓட்டும் வரை கிளறவேண்டும்.

கடைசியாக சிறிது நல்ல எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான காளான் மிளகு மசாலா ரெடி.

இதனை புல்கா மற்றும் சாதத்திற்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும்.

கொங்கு நாட்டு ஸ்பெஷல், பள்ளிபாளையம் சிக்கன் இனி உங்க வீட்டிலும் Easy  செய்யலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement